வெள்ளை அரிசி சோற்றை விட 8 மடங்கு இரும்புச் சத்து அதிகம்... இந்த தானியத்தை இப்படி செஞ்சு சாப்பிடுங்க: டாக்டர் சிவராமன்
சாதாரண வெள்ளை அரிசியை விட தானிய வகையான கம்புவில் 8 மடங்கு இரும்புச் சத்து அதிகமாக இருப்பதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இது இரத்த சோகையை கட்டுப்படுத்த உதவுகிறது.
சாதாரண வெள்ளை அரிசியை விட தானிய வகையான கம்புவில் 8 மடங்கு இரும்புச் சத்து அதிகமாக இருப்பதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இது இரத்த சோகையை கட்டுப்படுத்த உதவுகிறது.
தானிய வகைகளில் மிகவும் எளிதாக கிடைக்கக் கூடியது கம்பு என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். நம் முன்னோர்களின் உணவில் தவறாமல் இடம் பிடித்த கம்பு, அதன் பின்னர் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார். ஏனெனில், ஏழை மக்களே அதிகமாக கம்புவை சாப்பிடுவதாக ஒரு தவறான புரிதல் நம்மிடையே இருக்கிறது.
Advertisment
ஆனால், தானிய வகைகளில் முதலிடம் பெறும் அனைத்து பண்புகளும் கம்புவில் இருக்கிறது என்று மருத்துவர் சிவராமன் குறிப்பிடுகிறார். உதாரணமாக சாதாரண வெள்ளை அரிசியையும், கம்புவையும் எடுத்துக் கொண்டால், கம்பு அரிசியில் 8 மடங்கு இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது என்று அவர் அறிவுறுத்துகிறார்.
இந்தியர்கள் அதிகமாக அரிசி உணவுகளை சாப்பிடுகின்றனர். ஆனால், இந்த அரிசி உணவில் இரும்புச் சத்து இல்லாத காரணத்தினால் தான் இரத்த சோகை பாதிப்பு அதிகரித்து வருவதாக உலக சுகாதார மையம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், சாதாரண அரிசியை அதிகமாக எடுத்துக் கொண்டதன் காரணத்தினால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டது.
எனவே, ஒரு குடும்பத்தில் யாருக்காவது இரத்த சோகை பாதிப்பு இருந்தால் அவர்கள் வாரத்திற்கு இரண்டு முறையாவது கம்பு அரிசி சாதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். கம்பு அரிசி சாதத்தில் மோர், தயிர், சின்ன வெங்காயம் மற்றும் கொஞ்சமாக முருங்கைக் கீரை சேர்த்து சாப்பிட்டால் உடலின் ஆரோக்கியம் மேம்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
இது தவிர கம்பங்கூழையும் நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் சிவராமன் எடுத்துரைக்கிறார். இது போன்ற உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலமாக தான் அவற்றின் சுவை பழக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி - Healthy Tamilnadu Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.