வெப்பத்தால் சிதைக்க முடியாத விட்டமின் சி இது மட்டும் தான்; நம்மூரில் விளையும் இந்தக் காயை ஒரு நாளும் மிஸ் பண்ணாதீங்க: மருத்துவர் சிவராமன்
நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி-யை வெப்பத்தின் மூலம் சிதைக்க முடியாது என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். மேலும், நெல்லிக்காயின் பல்வேறு சிறப்புகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பார்ப்பதற்கு சிறிதாகவும், சாதாரணமாகவும் தோன்றக் கூடிய எத்தனையோ விஷயங்கள், எண்ணற்ற பயன்களை கொண்டிருக்கும். அந்த வகையில் நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் சிவராமன் அறிவுறுத்தியுள்ளார்.
Advertisment
நம் ஊர் மக்கள் அனைவரும் நெல்லிக்காயை அவசியம் கொண்டாட வேண்டும் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். பெரிய நெல்லிக்காயில் இருக்கக் கூடிய வைட்டமின் சி, மூன்று ஆரஞ்சு பழங்களின் சத்துகளுக்கு சமமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அதன் மகத்துவத்தை நாம் புரிந்து கொள்வதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஒரு கிலோ நெல்லிக்காய் ரூ. 5-க்கு விற்பனையாகும் அவல நிலையில் இருப்பதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். நம் ஊரில் இருக்கக் கூடிய பழங்களை பட்டியலிட்டால், அதில் முதல் இடத்தை பெரிய நெல்லிக்காய்க்கு கொடுக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வைட்டமின் சி-யை கொதிக்க வைத்தால் அவை சிதைந்து விடும் தன்மை உடையது என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். ஆனால், நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி மிகவும் மேம்பட்டது. அந்த வகையில் தினசரி ஒரு நெல்லிக்காய் சாப்பிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
வயோதிகத்தை தூண்டிக் கூடிய கூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் நெல்லிக்காய்க்கு இருக்கிறது. ஆனால், நாம் அனைவரும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கிவி உள்ளிட்ட பழங்களையே பெரிதாக கருதுகிறோம்.
நம் ஊரில் எளிதாக கிடைக்கக் கூடிய உணவுகள் குறித்து நாம் அவமானப்படுகிறோம் எனக் கூறும் மருத்துவர் சிவராமன், அந்த நிலையை மாற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். வீட்டிற்கு வருகை தரும் நபர்களுக்கு நெல்லிக்காய் கொடுத்து வரவேற்கும் அளவிற்கு அதில் அவ்வளவு சிறப்புகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி - Tamil Speech Box Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.