இரும்புச்சத்து என்பது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அவசியமான ஒன்றாகும். இது உடல் முழுவதும் ரத்த சிவப்பணுக்களில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை போதுமான அளவு உட்கொள்வது ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்கவும், இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்கவும் அவசியமான ஒன்றாகும்.
இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்தசோகை ஏற்படும் அதனால் சோர்வு, பலவீனம் மற்றும் வெளிர் தோல் ஆகியவை அறிகுறிகளாக காட்டும்.
அந்த வகையில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் என்னென்ன, அவற்றை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்று பார்ப்போம்.
இரும்புச் சத்தை அதிகரிக்கும் சிறந்த காலை உணவுகள்! Dr Sivaraman speech in Tamil | Benefits of Millets
சிறுதானியங்களான கம்பு, சோளம், வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவை காலை உணவாக சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து விடுபடலாம்.
அரிசி, கோதுமையுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை அதிகம் கொண்டுள்ளது.
திணை: திணையை காலை உணவாக எடுத்து கொள்வது அவ்வளவு நல்லது. இல்லையெனில் திணையில் சர்க்கரைப்பொங்கல், கருப்பட்டி, உளுந்தங்களி போன்றவற்றை செய்து ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம்.
கேழ்வரகு: கேழ்வரகில் கஞ்சி, கூழ், களி, தோசை, அடை, லட்டு, அல்வா மற்றும் பக்கோடா போன்றவற்றை செய்து சாப்பிடலாம். கால்சியம் அதிகளவு இருப்பதால் மூட்டுவலி பிரச்சனைக்கு தீர்வாகும்.
கம்பு: கம்பு உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய சிறுதானியம் என்பதால் கம்மங்கூழ், தோசை, குழிப்பணியாரம் போன்ற உணவுகள் செய்து சாப்பிடலாம். புரதம் மற்றும் கால்சியம் கம்பில் அதிகம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“