சத்தான உணவுகள் பெரும்பாலும் சுவையாக இருக்காது என்னும் கூற்று மக்கள் மனதில் இருந்து வருகிறது. ஆனால், சத்து மிகுந்த கருப்பு கவுனி அரிசி மூலம் மிகச் சுவையான காலை உணவு தயாரிக்கும் செயல்முறையை மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளர்.
இதற்கு தேவையான பொருள்கள்:
கருப்பு கவுனி அரிசி ஒரு கப்,
4 முதல் 6 பல் பூண்டு,
தேவையான அளவு சீரகம்,
தேங்காய் பால்
கருப்பு கவுனி அரிசியை வேக வைப்பது கடினம் என்பதால் முன் தினம் இரவே அதனை இரண்டு முறை நன்றாக கழுவி ஊற வைக்க வேண்டும். அரிசி நன்றாக ஊறியதும் அடுத்த நாள் காலை அதனை மூன்று பங்கு தண்ணீர் கொண்டு குக்கரில் வேக வைக்க வேண்டும். அரிசியை வேக வைக்கும் போதே அத்துடன் சுமார் 4 முதல் 6 பல் பூண்டுகள் மற்றும் தேவையான அளவு சீரகத்தை அவற்றுடன் சேர்க்க வேண்டும். அதன்பின்னர், அரிசி நன்றாக வெந்ததும், அத்துடன் தேங்காய் பாலை சேர்த்து பரிமாற வேண்டும்.
இப்படிச் செய்வதனால் சுவையான காலை உணவு தயாராவதுடன், நாள் முழுவதும் சோர்வின்றி இயங்குவதற்கு சத்துகளும் எளிதாக கிடைத்து விடும்.