புரதம் ரொம்ப முக்கியம்; ஆயுளை அதிகரிக்க தினமும் இரவில் இதை செய்யுங்க: மருத்துவர் சிவராமன்
புரதச் சத்தின் அவசியம் குறித்து மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்தியர்களிடம் புரதம் தொடர்பான விழிப்புணர்வு இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும், தசைகளின் வளர்ச்சியை சீராக்குவதற்கு புரதம் என்பது அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். அந்த வகையில் புரதச் சத்தை எவ்வாறு பெற முடியும் என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
Advertisment
நம் வீட்டு கிட்சனில் நாம் கூடுதலாக செலவளிக்கும் 20 நிமிடங்கள், நம் ஆயுட்காலத்தில் 20 ஆண்டுகளை அதிகரிக்கும் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். அதன்படி, புரதச் சத்து நிறைந்த உணவுகளை அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாம் சாப்பிடுவதற்கு தேவையான அளவு கொண்டை கடலையை இரவு நேரத்தில் ஊற வைத்து விட்டு, காலை எழுந்ததும் அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து சாப்பிடலாம் என்று அவர் கூறுகிறார். இதன் மூலம் புரதச் சத்து கிடைத்து விடுகிறது.
சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் சுகரின் அளவு வேகமாக உயர்வதை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டை கடலைக்கு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில், இதில் புரதச் சத்து அதிகமாகவும் கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருக்கிறது. இந்த கார்போஹைட்ரேட்டுகள் வேகமாக இரத்தத்தில் கலப்பதில்லை என மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
Advertisment
Advertisements
சிலருக்கு கொண்டை கடலை சாப்பிடுவதால் செரிமான தொல்லை ஏற்படுவதாக கூறப்படுகிறது. அவர்கள், கொண்டை கடலை மீது சிறிதளவு சீரகத்தூள் அல்லது ஓமம் சேர்த்து சாப்பிடலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்தியர்கள் அதிலும் குறிப்பாக தமிழர்கள் இடையே புரதச் சத்து குறித்த விழிப்புணர்வு இல்லை என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோவிற்கு 0.8 கிராம் அளவிற்கு ஒரு நாளில் மட்டும் புரதச் சத்து தேவைப்படுகிறது. அந்த வகையில் புரதம் நிறைந்த உணவுகளை தினசரி எடுத்துக் கொள்வது நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நன்றி - Healthy Tamilnadu Yotuube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.