சித்த மருத்துவர் சிவராமன் ஏராளமான மருத்துவ குறிப்புகளை வழங்கி வருகிறார். நாம் அன்றாட உண்ணும் உணவுகளில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து மிகவும் தெளிவாகவும், அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாகவும் அவர் கூறி வருகிறார். அந்த வகையில், பிபி குறைய தயிர் பச்சடி உதவுவதாக டாக்டர் சிவராமன் ட்ரெண்ட்கேர்தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
பன்மடங்கு அதிகமான சல்ஃபோரில் சத்தும், அதிக ஆன்டி அக்சினேடு நிரம்பிய உணவு நம்முடைய வீடுகளில் அன்றாட தயார் செய்யப்படும் 'தயிர் பச்சடி' உணவு தான். அதிலும் சின்னவெங்காயம் போட்ட தயிர்பச்சடி தான்.
வெங்காயத்தில் இருக்கும் பீனாலிக் அமிலங்கள் போன்று வேறு எந்த உணவிலும் இல்லை. தயிரில் இருந்து எடுக்கப்படும் மோரில் சல்ஃபோரில் சத்து அதிகம் இருக்கிறது என்று அவர் கூறினார். மேலும் இதனால் பிபி குறையும் என்றார்.
நமக்கு இரத்த அழுத்தம், இரத்தக் கொதிப்பு, இருதய நோய் போன்ற பாதிப்புகள் இல்லையென்றாலும் உப்பு சாப்பிடுவதை குறைக்க வேண்டும். இது நம்முடைய நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும் என்கிறார்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.