கிட்னி கல்? 'டீ'-க்குப் பதில் இந்த டிரிங்க்; 15 நிமிசம் இப்படி குடிங்க: டாக்டர் சிவராமன்
சிறுநீரக கல் பிரச்சனையை எவ்வாறு இயற்கையான முறையில் சரி செய்யலாம் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இதற்காக, நெல்லிக்காய் சாறு குடிக்கலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
சிறுநீரக கல் பிரச்சனையை எவ்வாறு இயற்கையான முறையில் சரி செய்யலாம் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இதற்காக, நெல்லிக்காய் சாறு குடிக்கலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
நமது உணவுப் பழக்கவழக்கங்கள் உடல் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகள் பலருக்கும் பெரும் சவாலாக உள்ளன. இது குறித்த பல்வேறு தகவல்களை மருத்துவர் சிவராமன், தமிழ் ஸ்பீச் பாக்ஸ் என்ற யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
அதன்படி, காலை நேரத்தில் தேநீர் அருந்துவது பித்தத்தை அதிகரிக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுக்கிறார். எனவே, அதற்கு பதிலாக நெல்லிக்காய் ஜூஸ் தயாரித்து குடிக்கலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
இதற்காக, இரண்டு பெரிய நெல்லிக்காய்களை எடுத்து, விதைகளை நீக்கி, அவற்றை ஜூஸாக அரைத்துக் கொள்ளலாம். இத்துடன் சர்க்கரை, உப்பு அல்லது தேன் போன்றவற்றை சேர்க்கக் கூடாது.
மேலும், இந்த நெல்லிக்காய் ஜூஸை 15 நிமிடங்களுக்கு மெதுவாக அருந்த வேண்டும். இது எச்சிலுடன் நன்றாகக் கலக்க உதவும் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இந்த எளிய பழக்கம் உடலில் உள்ள அதிகப்படியான பித்தத்தைக் குறைக்க உதவுகிறது.
Advertisment
Advertisements
இது சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுக்கவும், ஏற்கனவே இருக்கும் கல்லை கரைக்கவும் உதவி புரிகிறது என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்கின்றன.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.