இந்த கிழங்கை இப்படி சாப்பிடுங்க... ஆயுளில் 20 ஆண்டுகள் கூடும்: மருத்துவர் சிவராமன்
வெளிநாட்டு பழங்களை விரும்பி சாப்பிடும் நாம் ஏன் நம்ம ஊர் பழங்களில் கவனம் செலுத்துவது இல்லை என்று கூறிய மருத்துவர் சிவராமன் ஆயுளை அதிகரிக்கும் கிழங்கு வகை ஒன்றை பற்றியும் கூறுகிறார்.
வெளிநாட்டு பழங்களை விரும்பி சாப்பிடும் நாம் ஏன் நம்ம ஊர் பழங்களில் கவனம் செலுத்துவது இல்லை என்று கூறிய மருத்துவர் சிவராமன் ஆயுளை அதிகரிக்கும் கிழங்கு வகை ஒன்றை பற்றியும் கூறுகிறார்.
சக்கரைவள்ளி கிழங்கு இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. இதனை வேகவைத்து சாப்பிடும் போது, இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு உயருவது தாமதம் ஆகிறது என டாக்டர் சிவரமான் கூறுகிறார். இதனாலேயே பலரும் சர்க்கரைவள்ளி கிழங்கை விரும்பி சாப்பிடுகின்றனர்.
Advertisment
ஒரு ஆவணப்படத்தில் ஜப்பானில் இருக்கக் கூடிய ஒக்கினாவா என்ற தீவில் சராசரி ஆயுட்காலம் 103 வயது என குறிப்பிடப்பட்டுள்ளதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். மேலும் அந்த தீவில் இருக்கும் மக்கள் குறித்த தகவல்கள் அந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறினார்.
அங்கு இருப்பவர்களிடம் இது குறித்து கேட்டறிந்த போது அவர்கள் சில தகவல்களை பகிர்ந்து கொண்டதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அதன்படி, அங்கு இருப்பவர்கள் அதிகமாக விவசாயம் செய்து தங்கள் உணவுகளை உற்பத்தி செய்கின்றனர்.
மேலும், வயிற்றுக்கு 80 சதவீத உணவு மட்டுமே அவர்கள் சாப்பிடுகின்றனர். குறிப்பாக, அங்கு சுற்றி இருக்க கூடிய மீன்கள் மற்றும் கருநீல நிற சக்கரைவள்ளி கிழங்கை அப்பகுதி மக்கள் அதிகமாக சாப்பிடுகின்றனர் என மருத்துவர் சிவராமன் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
அதில் இருந்து கிடைக்கக் கூடிய அந்தோசைனின் என்கிற சத்து புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது என்றார். இதே சத்து நம் ஊரில் இருக்கும் நாவல் பழம், கத்திரிக்காயிலும் இருக்கிறது என்று சிவராமன் கூறியுள்ளார். எனவே, இது போன்ற உணவு பொருட்களை கண்டறிந்து நாம் சாப்பிட வேண்டும் என சிவராமன் அறிவுறுத்தியுள்ளார்.
சக்கரைவள்ளி கிழங்கில், கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துகளும் காணப்படுகின்றன. எனவே, இது போன்ற ஏராளமான சத்துகள் இருக்கும் சக்கரைவள்ளி கிழங்கு, நம் உணவில் இருப்பதை நாம் உறுதி செய்திட வேண்டும்.
அந்த வகையில் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு பொருட்கள் குறித்து விழிப்புணர்வு பெற்று, அவற்றை சாப்பிடுவதன் மூலம் நம் ஆயுள் காலத்தை நீட்டிக்க முடியும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதுமட்டுமின்றி கிவி, பெர்ரி பழங்களை அதிகம் விலைபோட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் அதே சத்துக்கள் உள்ள நெல்லிக்காயை எத்தனை பேர் விரும்பி சாப்பிடுகிறோம்.
வெளிநாட்டு உணவு பொருட்களில் கிடைக்கும் அதே சத்துக்கள் தான் நம்ம ஊர் பழங்களிலும் கிடைக்கிறது என்று சிவராமன் கூறினார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.