சுகருக்கு பெரிய எதிரி இந்தக் கீரை; பொடியாக வாங்கி தினமும் காலை அரை ஸ்பூன்..! டாக்டர் உஷா நந்தினி டிப்ஸ்
சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் உதவக் கூடிய மூக்கிரட்டை கீரை குறித்து மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார். இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்க்கரை நோயாளிகளின் பெரும் கவலையே, அந்த நோயின் தாக்கத்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுமோ என்பதாக தான் இருக்கும். அதன்படி, சர்க்கரை நோயின் பக்கவிளைவுகளை எப்படி கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார்.
Advertisment
அதனடிப்படையில், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக் கூடிய மூளை, இருதயம், சிறுநீரக பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கு மூக்கிரட்டை கீரை பெருமளவு பயன்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்க்கரை நோயாளிகளுக்கு அடிப்படை பிரச்சனையாக இருக்கும் கால் எரிச்சல், குத்தல் போன்ற உபாதைகளையும், தீர்ப்பதற்கு இந்தக் கீரை உதவுகிறது.
உடலை உறுதிப்படுத்தும் தன்மை மூக்கிரட்டை கீரையில் இருக்கிறது. இவை மலச்சிக்கல் பிரச்சனையையும் குறைக்கிறது. இரத்தத்தை சுத்திகரிப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதேபோல், சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு இது மருந்தாக அமைகிறது. இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்கும் அன்டி ஹைப்பர் க்ளைசெமிக் தன்மை மூக்கிரட்டை கீரையில் இருக்கிறது.
மேலும், சிறுநீரக பிரச்சனைக்கு மூக்கிரட்டை கீரை பயன்படுகிறது என மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது என்று மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார். இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த மூக்கிரட்டை கீரையை, பருப்புடன் சேர்த்து மசியலாக சாப்பிடலாம்.
Advertisment
Advertisements
இவ்வாறு கீரையாக வாங்க முடியாதவர்கள், மூக்கிரட்டை கீரை பொடியை கடைகளில் இருந்து வாங்கி வைத்துக் கொள்ளலாம். அதன்படி, இந்தப் பொடியை அரை ஸ்பூன் அளவிற்கு எடுத்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து குடிக்கலாம். இதனை காலை நேரத்தில் எடுத்துக் கொள்ளும் போது, பெருமளவு பயன் அளிக்கும் என மருத்துவர் உஷா நந்தினி கூறுகிறார்.
நன்றி - PuthuYugamTV Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.