இரவில் ஊற வைத்து காலையில் கொதிக்க வையுங்க... எடை குறைப்புக்கு இந்த ஒரு சூப்: டாக்டர் உஷா நந்தினி
உடல் எடையை குறைப்பதற்கான சில டிப்ஸை மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார். குறிப்பாக, இதற்கு பயன்படும் சூப் தயாரிப்பது எப்படி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினசரி ஏதாவது ஒரு சூப் எடுத்துக் கொண்டால் உடல் எடையை குறைக்க முடியும் என மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார். இவை ஒட்டு மொத்த உடல் எடையை குறைக்கவும், வயிற்று பகுதியை சுற்றி இருக்கும் கொழுப்பை குறைக்கவும் பயன்படுகிறது என அவர் கூறுகிறார்.
Advertisment
கொள்ளு சூப்:
உடல் எடை மட்டுமின்றி இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளையும் குறைக்க கொள்ளு சூப் உதவுகிறது என மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார். கொள்ளை இரவு நேரத்தில் ஊறவைத்து விட்டு, காலையில் அதனை வேக வைத்து அதன் தண்ணீரை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் சிறிதளவு பெருங்காயத்தூள், சீரகத்தூள், உப்பு கலந்து குடிக்கலாம்.
முருங்கைக் கீரை சூப்:
Advertisment
Advertisement
தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை சேர்க்க வேண்டும். இது நன்றாக கொதித்ததும் சுமார் 20 நிமிடங்கள் கழித்து உப்பு சேர்த்து குடித்து விடலாம். இந்த சூப்பும் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.
தக்காளி சூப்:
தக்காளி, நம் உடலில் அன்டி ஆக்சிடென்ட்ஸை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. மேலும், தேவையில்லாத கொழுப்பையும் இது குறைக்கிறது. தக்காளியை சாறு பிழிந்து அதில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து குடிக்கலாம்.
வாழைத்தண்டு சூப்:
வாழைத்தண்டை வேக வைத்து அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு சேர்த்து குடிக்கலாம். இதில் இருக்கும் நார்ச்சத்து உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி செய்கிறது. மேலும், இன்சுலினை கிரகிக்கும் தன்மையையும் இது ஊக்குவிக்கிறது.
வெள்ளரி - சுரைக்காய் சூப்:
வெள்ளரிக்காய் மற்றும் சுரைக்காயை தோல் சீவி அவற்றை சிறிது நேரம் ஆவியில் வேகவைக்க வேண்டும். அதன் பின்னர், இவற்றை மிக்ஸியில் உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் வெள்ளரி - சுரைக்காய் சூப் தயாராகி விடும்.
இந்த வகையான சூப்களை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம் என மருத்துவர் உஷா நந்தினி அறிவுறுத்தியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.