ஆண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்... ஒரு நோயும் எட்டிப் பார்க்காது; இந்தப் பொடியை இப்படி யூஸ் பண்ணுங்க: டாக்டர் யோக வித்யா
நீர்முள்ளி மூலிகையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது என்று மருத்துவர் யோக வித்யா கூறுகிறார். இது டெஸ்டோஸ்ட்ரோன் அளவை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. இது தவிர சிறுநீரக பிரச்சனையையும் சீரமைக்க உதவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீர்முள்ளி மூலிகையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது என்று மருத்துவர் யோக வித்யா கூறுகிறார். இது டெஸ்டோஸ்ட்ரோன் அளவை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. இது தவிர சிறுநீரக பிரச்சனையையும் சீரமைக்க உதவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரே ஒரு சித்த மருந்தின் மூலமாக ஆண்களின் பல்வேறு விதமான பிரச்சனைகளையும் சரி செய்ய முடியும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக, வீட்டில் இருந்தபடியே இந்த மருந்தை தயாரித்து எடுத்துக் கொள்ளலாம் என்று தனது யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
அந்த வகையில் நீர்முள்ளி மூலிகையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது என்று மருத்துவர் யோக வித்யா கூறுகிறார். இது டெஸ்டோஸ்ட்ரோன் அளவை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. இது தவிர சிறுநீரக பிரச்சனையையும் சீரமைக்க உதவுவதாக மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், நீர்முள்ளியை பொடியாக பயன்படுத்தலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். இதற்காக தினசரி ஒரு ஸ்பூன் அளவிற்கு நீர்முள்ளி பொடியை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து கசாயமாக குடிக்கலாம் என்று மருத்துவர் யோக வித்யா குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு நாள்தோறும் பின்பற்றும் போது விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விதை வீக்கம் பாதிப்பை குணப்படுத்தும் ஆற்றலும் நீர்முள்ளிக்கு இருக்கிறது. சிறுநீர் வெளியேறும் போது ஏற்படும் எரிச்சலையும் இது கட்டுப்படுத்துகிறது. எனவே, இதனை ஆண்கள் பயன்படுத்தலாம் என்று மருத்துவர் யோக வித்யா வலியுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
எனினும், இதனை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக ஒரு மருத்துவரை கலந்தாலோசித்து உங்களுடைய உடல் நிலைக்கு ஏற்ப முடிவு செய்வது, தேவையற்ற சிக்கல்களை தடுக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.