விந்தணு ஆரோக்கியம் என்பது ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். ஆரோக்கியமான விந்தணுக்கள் கருவுறுதலுக்கு அவசியம். டாக்டர் யோகவித்யா விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில குறிப்புகளை பற்றி கூறுகிறார்.
Advertisment
டிப்ஸ் 1 - வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவும்
டிப்ஸ் 2: கோதுமை, மைதா உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்
டிப்ஸ் 3: கசப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்
Advertisment
Advertisements
டிப்ஸ் 4: குதிரைவாலி அரிசி, தினை அரிசி மற்றும் பழுப்பு அரிசி போன்ற தானியங்களை உங்கள் உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த தானியங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையையும், இயக்கத்தையும் அதிகரிக்க உதவும்.
டிப்ஸ் 5: புரதச்சத்து நிறைந்த உணவுகள் விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். முட்டை, மீன், கோழி மற்றும் பருப்பு வகைகள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
டிப்ஸ் 6: வெண்ணெய் பழம் விந்தணு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
டிப்ஸ் 7: தேன் மற்றும் பால் கலந்த கலவையை உட்கொள்ளுதல் விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. செவ்வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது. இது விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்கு உதவும்.
டிப்ஸ் 8: கொட்டை வகைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளன. இவை விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. பேரீட்சை பழம் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். பாதாம் பால் அருந்துவது விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது.
இந்த உணவுகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என டாக்டர் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.