Evening Snacks Recipe; bonda with dosa batter in tamil: தின்னத் தின்னத் திகட்டாத தோசை மாவில் செய்த போண்டா தாயார் செய்ய உங்களிடம் அரை கப் தோசை மாவு இருந்தால் போதும்.
Evening Snacks Recipe; bonda with dosa batter in tamil: தின்னத் தின்னத் திகட்டாத தோசை மாவில் செய்த போண்டா தாயார் செய்ய உங்களிடம் அரை கப் தோசை மாவு இருந்தால் போதும்.
healthy food Tamil News: மாலை நேரத்தில் சூடாக எதாவது சாப்பிட வேண்டும் என நம்மில் பலர் நினைப்பதுண்டு. குறிப்பாக வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள். இவர்களுக்கு நமக்கு தெரிந்ததையே அடிக்கடி செய்து கொடுத்து போர் அடிக்கும். எனவே தான் உங்களுக்காக ஈஸியான ஒரு ரெசிபியை பகிர்ந்துள்ளோம்.
Advertisment
இந்த அற்புதமான ரெசிபியை தயார் செய்ய உங்களுக்கு அதிக நேரம் பிடிக்காது. வெறும் 10 நிமிடங்கள் போதும். அப்படி என்ன ரெசிபி என்றால், தின்னத் தின்னத் திகட்டாத தோசை மாவில் செய்த போண்டா தான் அது. இவை தாயார் செய்ய உங்களிடம் அரை கப் தோசை மாவு இருந்தால் போதும். அவற்றில் அட்டகாசமான போண்டா செய்து அசத்தலாம்.
தோசை மாவில் போண்டா தயார் செய்யத் தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
தோசை மாவு - 3 கரண்டி பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) கொத்தமல்லி - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 கருவேப்பிலை ரவை - 3 டேபிள் ஸ்பூன் கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன் பெருங்காயம் - ஒரு சிட்டிகை உப்பு - தேவையான அளவு
தோசை மாவில் போண்டா சிம்பிள் செய்முறை:
முதலில் தோசை மாவை ஒரு சிறிய அகலமான பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு அவற்றுடன் ரவை சேர்த்து கரண்டியால் மிக்ஸ் செய்து கொள்ளவும். தொடர்ந்து கடலை மாவு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
இந்த மாவை ஒரு மூடியால் 10 முதல் 15 நிமிடங்களுக்கு நன்றாக ஊற வைத்துக்கொள்ளவும்.
இப்போது கடாயில் எண்ணெயை சூடேற்றி காய்ந்ததும், உருண்டைகளாக பிடித்து ஒன்றன் பின் ஒன்றாக எண்ணெய் இட்டு பொரிக்கவும்.
மாவு எல்லா பக்கமும் பொன்னிறமாக பொரிந்ததும் அவற்றை எடுத்து ருசித்து மகிழவும்.
மிகவும் வித்தியாசமான மற்றும் சுவையான இந்த போண்டாவை நீங்களும் ஒரு முறை முயற்சியுங்க மக்களே!!!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil