சீக்கிரம் வெயிட் குறையணுமா? தாமரை விதையை இப்படி சாப்பிடுங்க: டாக்டர் நந்தினி
நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்கிறீர்களா? உங்களுக்கு சீக்கிரம் வெயிட் குறைய வேண்டுமா அப்போது, டாக்டர் நந்தினி கூறியுள்ளபடி தாமரை விதையை இப்படி சாப்பிட்டு பாருங்கள், சீக்கிரம் எடையைக் குறைக்கலாம்.

Advertisment
டாக்டர் நந்தினி கூறுகையில், “பசியைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். உண்ணாவிரதம் இருக்கும் நேரத்தில், இதை அதிகமாக எடுத்துக்கொள்வார்கள். அப்படியான ஒரு விஷயத்தைப் பற்றிதான் இன்றைக்கு நாம் பார்க்கப்போகிறோம். அது என்ன என்று யோசிக்கிறீர்களா? அதுதான் தாமரை விதைகள்” என்று கூறியுள்ளார்.
“மக்கானா என்று இப்போதெல்லாம் ரொம்ப பிரபலமாகப் போய்க்கொண்டிருக்கிறது. எல்லாருக்கும் தெரியும். இதனுடைய பயன்கள் பற்றிதான் பார்க்கப்போகிறோம். இதில் அதிகமாக புரதமும் நார்ச்சத்தும் நிறைய இருக்கிறது. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் நீங்கள் இதை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். பசியைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும். தேவையில்லாமல் ஸ்நாக்ஸ் சாப்பிடும் மனநிலையையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும்” என்று டாக்டர் நந்தினி கூறுகிறார்.
Advertisment
Advertisements
“இரண்டாவது இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் ரொம்ப அதிகமாக இருப்பதால் இதயத்தின் தசைகளை வலிமைப்படுத்தும். இதய நோய் இருக்கிறவர்கள் இதை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்” டாக்டர் நந்தினி பரிந்துரைக்கிறார்.
“தாமரை விதையில் கிளைசெமிக் இண்டெக்ஸ் ரொம்ப குறைவு. நீரிழிவு நோயாளிகள், ரத்தச் சர்க்கரை இருப்பவர்கள் என்ன சாப்பிட்டாலும் சுகர் ஏறுகிறது என்று கூறுபவர்கள், கண்டிப்பாக இந்த தாமரை விதைகளை கொஞ்ஸம் பெப்பர் போட்டு சாப்பிட்டுக்கொள்ளுங்கள். இதில் ரொம்ப கம்மியான சுகர் அளவுதான் இருக்கிறது. சுகர் அளவை ஏற்றாது” என்று டாக்டர் நந்தினி ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.