இந்த டீ குடிச்சா பி.பி சர்ருன்னு குறையும்; நார்மலா இருக்கவங்க அடிக்கடி குடிக்காதீங்க: டாக்டர் ஸகுல்

ரத்த கொதிப்பு இருக்கிறவர்கள் இந்த டீயைக் குடித்தால் பி.பி அளவு வேகமாக சர்ருன்னு குறையும், அதனால், நார்மலா இருக்கிறவர்கள் அடிக்கடி இந்த டீயைக் குடிக்காதீர்கள என்று டாக்டர் ஸகுல் ராமாநுஜ முகுந்தன் கூறியுள்ளார். பி.பி-யை சர்ருன்னும் குறைக்கும் டீ என்ன என்று இங்கே பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Dr Sagul Ramanuja Mugunthan

“ஹைபர் டென்சன் அதாவது ரத்தக் கொதிப்பு இருக்கிறவர்கள் தினமும் குடிக்க வேண்டிய ஒரு டீ

ரத்த கொதிப்பு இருக்கிறவர்கள் இந்த டீயைக் குடித்தால் பி.பி அளவு வேகமாக சர்ருன்னு குறையும், அதனால், நார்மலா இருக்கிறவர்கள் அடிக்கடி இந்த டீயைக் குடிக்காதீர்கள என்று டாக்டர் ஸகுல் ராமாநுஜ முகுந்தன் கூறியுள்ளார். பி.பி-யை சர்ருன்னும் குறைக்கும் டீ என்ன என்று இங்கே பார்க்கலாம்.

Advertisment


சர்க்கரை நோயும் ரத்தக் கொதிப்பு என்கிற ரத்த அழுத்தமும் பலருக்கும் பரவலாக இருக்கிற ஒரு நோயாக மாறிவிட்டது. பலரும் தங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவையும் ரத்த அழுத்த அளவையும் எப்படி குறைப்பது, என்ன சாப்பிடலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கின்றனர். தனது யூடியூப் சேனலில் டாக்டர் ஸகுல் ராமநுஜ முகுந்தன் இந்த டீயை குடித்தால் ரத்தக் கொதிப்பு வேகமாக குறையும் என்று கூறுகிறார். அது என்ன டீ என்று டாக்டர் ஸகுல் ராமாநுஜ முகுந்தன் கூறுவதை அப்படியே இங்கே தருகிறோம்.

டாக்டர் ஸகுல் ராமாநுஜ முகுந்தன் கூறுகையில், “ஹைபர் டென்சன் அதாவது ரத்தக் கொதிப்பு இருக்கிறவர்கள் தினமும் குடிக்க வேண்டிய ஒரு டீ பற்றி பார்க்கப்போகிறோம். இந்த டீயை தொடர்ந்து குடித்துவந்தால் அவர்களுடைய ரத்தக் கொதிப்புக்கான மாத்திரை டோஸின் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ள முடியும். இன்னும் சொல்லப்போனால், பி.பி அளவு பார்டர் லைனைவிட கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்றால், பி.பி மாத்திரையின் அவசியம் கூட ஏற்படாது” என்று கூறுகிறார்.

ரத்த அழுத்தம் ஒரு குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக இருந்தால் அதை ஹைபர் டென்சன் அல்லது ரத்தக் கொதிப்பு என்கிறோம். ரத்தக் கொதிப்பு ஏற்படுவதற்கு பல்வேறு வகையான காரணங்கள் இருக்கிறது. ரத்தக் கொதிப்பு இருக்கிறவர்கள் எதனால், ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறடு என்ற காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு பிறகு, டாக்டர் கொடுக்கிற மருந்தை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்கூட, இந்த டீயை ரெகுலராக குடியுங்கள், உன்களுடைய நல்லாவே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று டாக்டர் ஸகுல் ராமாநுஜ முகுந்தன் கூறுகிறார்.

Advertisment
Advertisements

வழக்கமாக ரத்த அழுத்தத்திற்கு கொடுக்கப்படுகிற மருந்தில், ஏ.சி.இ இன்ஹிபிட்டர் (ACE inhibitor) என்று சொல்லக்கூடிய ஒரு வகையான மருந்து பொதுவாக எல்லாருக்கும் கொடுப்பது. இந்த டீயில் இருக்கிற சில ஃபைட்டோ நியூட்ரின்ஸ் இயற்கையான ஏ.சி.இ இன்ஹிபிட்டர் (ACE inhibitor) ஆக செயல்படுகிறது. அதனால், இந்த டீயை ரெகுலராக குடிக்கும்போது, ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்று பல்வேறு ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்திருக்கிறார்கள். நிறைய ஆராய்ச்சிகளில் தினமும் ஒரு கப் டீ கொடுத்திருக்கிறார்கள். ஒன்றரை மாதம் கழித்து அவர்களுடைய சிஸ்டோலிக் பி.பி டைஸ்டோலி பி.பி இரண்டுமே குறைந்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். சிஸ்டோலிக் பி.பி என்பது ஹையர் வேல்யூ, டைஸ்டோலிக் பி.பி என்பது லோயர் வேல்யூ. அதாவது, நீங்கள் நார்மலாக பி.பி செக் பண்ணால், 120/80 என்று சொல்வார்கள். இதில் 120 என்பது சிஸ்டோலிக் பி.பி, 80 என்பது டைஸ்டோலிக் பி.பி. இந்த டீயை தொடர்ந்து குடித்துவந்தால், இந்த ரெண்டு பி.பி வேல்யூமே குறைகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அது என்ன டீ என்றால் செம்பருத்தி டீ. இந்த செம்பருத்தி டீக்குதான் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் குணம் இருக்கிறது என்று டாக்டர் ஸகுல் ராமாநுஜ முகுந்தன் கூறுகிறார்.

இந்த செம்பருத்த் டீயை 2 வகைகளாக தயாரிக்கலாம் என்று டாக்டர் ஸகுல் ராமாநுஜ முகுந்தன் கூறுகிறார். ஒன்று, உங்கள் வீட்டில் அல்லது ஊரில் செம்பருத்தி செடி இருக்கிறது என்றால், அதில் உள்ள பூவைப் பறித்து, அந்த பூவின் இதழ்களை மட்டும் தண்ணீரில் கொதிக்க வைத்து, கொஞ்சம் நேரம் கழித்து அந்த தண்ணீரை வடிகட்டி அப்படியே குடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், கடையில் செம்பருத்தி லீவ்ஸ் என்று தனியாகக் கிடைக்கும். டீ போடுவதற்கு ஏற்ற மாதிரி அதை ஆல்ரெடி ட்ரை பண்ணி வைத்திருப்பார்கள். நீங்கள் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் லீப்பை போட்டு கொஞ்சம் நேரம் கழித்து அதை வடிக்கட்டி ஆற வைத்து குடிக்க வேண்டும். இந்த செம்பருத்தி டீயை நீங்கள் எப்படி தயாரித்தாலும் அதில் சர்க்கரையோ, கருப்பட்டி வெல்லமோ, தேனோ எதுவுமே கலக்கக்கூடாது. உங்களுக்கு வேண்டுமென்றால், கொஞ்சமாக எலுமிச்சை பழச்சாறு கலந்து குடிக்கலாம். தினமும் நீங்கள் குடிக்கிற காபி, டீக்கு பதிலாக இந்த செம்பருத்தி டீ போட்டு குடித்தால், ரத்த அழுத்தம் நன்றாக கட்டுப்பாட்டுக்குள் வரும். இதை பல்வேறு ஆராய்ச்சிகளில் நிரூபித்திருக்கிறார்கள் என்று டாக்டர் ஸகுல் ராமாநுஜ முகுந்தன் கூறுகிறார்.

அதே போல, ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல், இந்த செம்பருத்தி டீயை தினமும் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் இருக்கிறது. இரைப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை 50 சதவீதம் குறைக்கும். ஏற்கெனவே உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இருந்திருந்தால், அதாவது யாருக்காவது வயிற்றுப் புற்றுநோய் இருந்திருக்கிறது என்றால் உங்களுக்கு கேன்சர் வரக்கூடிய ஆபத்தை பாதியாகக் குறைக்கும். அதுமட்டுமில்லாமல், தினமும் செம்பருத்தி டீ குடிக்கும்போது, ரத்தத்தில் எல்.டி.எல் கொலஸ்ட்ரால் என்கிற கெட்டக் கொழுப்பு குறையும், எச்.டி.எல் என்று சொல்லக்கூடிய நல்லக் கொழுப்பு அதிகமாகும். ஃபேட்டி லிவர் என்கிற கொழுப்பு படிந்த கல்லீரல் இருக்கிறது என்றால் அந்த கொழுப்பைக் கரைப்பதற்கு ரொம்பவே உதவும். அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு ரொம்ப உடல்பருமன் இருக்கிறது என்றல் தினமும் நீங்கள் காபி டீ குடிப்பதற்கு பதிலாக செம்பருத்தி டீ குடித்தால் உங்களுடைய எடை குறைப்புக்கு ரொம்பவே உதவி செய்யும் என்று டாக்டர் ஸகுல் ராமாநுஜ முகுந்தன் கூறுகிறார்.

கடைசியாக, அதில் இருக்கிற வைட்டமின்கள், தாது உப்புக்கள், ஆண்ட்டி மைக்ரோபிள் பிராப்பர்ட்டீஸ் எல்லாம் நம்ம உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு உதவி செய்யும். ஆனால், ஒரு விஷயம் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பி.பி நார்மலாக இருக்கிறது அல்லது லோ பி.பி இருக்கிறது என்றால் நீங்கள் தினமும் இந்த செம்பருத்தி டீயைக் குடிக்கக் கூடாது. ஏனென்றால், இந்த செம்பருத்தி டீயை தினமும் குடித்துக்கொண்டு வரும்போது, ரத்த அழுத்தம் குறையும் என்று ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால், அதனால், உங்களுக்கு பி.பி நார்மலாக இருக்கிறது அல்லது லோ பி.பி இருக்கிறது என்றால், பி.பி இன்னும் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால், சில பக்க விளைவுகளும் வரும். அதனால், நீங்கள் இந்த செம்பருத்தி டீயை தினமும் குடிப்பதைத் தவிர்க்கலாம். எப்பொழுதாவது ஒருமுறை வாரத்திற்கு ஒருநாள் குடிக்கலாம் என்று டாக்டர் ஸகுல் ராமாநுஜ முகுந்தன் கூறுகிறார்.

அதே சமயம், ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் தினமும் செம்பருத்தி டீயை தாராளமாகக் குடிக்கலாம். அதனால், உங்களுடைய ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஒருநாள், 2 நாள் குடித்தால் என்றால் பலன் தெரியாது. குறைந்தது ஒன்றரை மாதம் தினமும் குடித்து வந்தால்தான் அதனுடைய பலன் உங்களுக்கு முழுசா கிடைக்கும் என்று டாக்டர் ஸகுல் ராமாநுஜ முகுந்தன் கூறுகிறார்.

Foods that helps to controls blood pressure

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: