ஜிம்மில் மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்வது முதல் பல விதமான உணவு டயட் முறையை பின்பற்றுவது வரை என, உடல் எடையை குறைக்க அனைத்தும் முயற்சி செய்வோம். நீங்களும் அதற்கு தான் போராடி வருகீறிர்கள் என்றால், ஆயுர்வேத கஷாயம் அதற்கு சிறந்த தீர்வாக இருக்கும். 7 நாள்களுக்குள் தொப்பை கொழுப்பு உட்பட உடல் எடையை குறைத்திட உதவியாக இருக்கும்.
தேவையானவை
- 1 வெள்ளரிக்காய்
- 1 ஸ்பூன் சீரக தூளை, ஊறவைக்க 1 கப் தண்ணீர்
- 1 ஸ்பூன் அரைத்த புதிய இஞ்சி
- 1 லேமன் ஜூஸ்
- 6-8 புதினா இலைகள்
செய்முறை
முதலில், 1 ஸ்பூன் சீரக தூளை, இரவு முழுவதும் 1 கப் தண்ணீரில் தனியாக ஊறவைத்திட வேண்டும்.
அடுத்து, வெள்ளரிக்காய் மற்றும் இஞ்சியை நன்கு கழுவு, தோல் உறிக்க வேண்டும். லேமனை பூழிஞ்சி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பிளெண்டரை எடுத்து, இந்த மூன்றயைும் ஒன்றாக சேர்த்து, நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.
தொடர்ந்து, விதைகளை வடிகட்டிய சீரக தண்ணீருடன், இதனை சேர்க்க வேண்டும்.
அடுத்து, இரவு முழுவதும் பிரிட்ஜில் வைத்துவிட்டு, காலையில் இந்த தண்ணீரை குடிக்கவும்.
தண்ணீரின் அளவை தேவைக்கேற்ப அதிகரித்துவிட்டு, காலையில் குடிக்கலாம். கொழுப்பை எரிக்கும் இந்த பானம், உடல் எடை குறைப்புக்கு சிறந்த தேர்வாகும்.
குறிப்பு: பானத்தின் செயல்திறனை வலுவாக்கிட ரொம்ப சிறியளவில் மிளகு சேர்க்கலாம்
பானத்தின் நன்மைகள்
வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த வெள்ளரிக்காய் சிறந்த கோடைகால உணவாகும். இது, உடலுக்கு இது ஊட்டமளிப்பது மட்டுமின்றி குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. ஏனெனில், அதிக நீர் சத்து, கோடை காலத்தில் உடலில் நீரிழப்பு ஏற்படுவதை தடுக்கிறது. வெள்ளரிக்காயில் உள்ள நார்ச்சத்து, இஞ்சியின் நார்ச்சத்து ஆகியவை கொழுப்பை எரிக்கவும் வாயு பிரச்சினையை குறைக்கவும் உதவுகிறது.
எலுமிச்சையில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது. ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இது, நீர் எடையைக் குறைக்க உதவுகிறது. இதேபோல், ஜீராவும் உடல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதனை ஒன்றாக சேர்த்து குடிப்பது நல்ல பலனை தரும்
பானத்தை குடிக்கும் சிறந்த நேரம்
இந்த கலவையை வெறும் வயிற்றில் குடிப்பதே சிறந்தது ஆகும். நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது அல்சர் அல்லது நெஞ்செரிச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், உணவுக்கு முன் அல்லது பின் இதை எடுத்துக் கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil