உலர் திராட்சையை ஊறவைத்து இப்படி சாப்பிடுங்க... உடல் நச்சுகள் ஓடிப் போகும்; டாக்டர் நித்யா

உலர் திராட்சையை எப்படி சாப்பிட்டால் உடலில் உள்ள நச்சுக்கள் சரியாகும் என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
nithya

உலர் திராட்சை சாப்பிடும் முறை - டாக்டர் நித்யா

ரத்தத்தில் சேரும் நிறைய டாக்ஸ்சின்ஸ் தான் பல நோய்களுக்கு காரணமாகும். அதனால் ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். ரத்தம் சுத்தமாக இருந்தால் நாம் இளமையாக இருப்போம். ரத்தத்தில் டாக்ஸ்சின்ஸ் நிறைய நிறைந்து இருப்பதனால் சோர்வான மற்றும் வறட்சியான தோல்கள், நிறம் மாறுதல், தோலில் அரிப்பு, தோலில் ஆங்காங்கே கருமை நிறம் இந்த மாதிரி பல பிரச்சனைகள் ஏற்படும்.

Advertisment

இதற்கு காரணம் நமது ரத்தத்தில் நிறைய டாக்ஸ்சின்ஸ் இருப்பது தான் என்று மிஸ்டர் லேடிஸ் யூடியூப் சேனலில் சித்தா டாக்டர் நித்யா கூறியிருக்கிறார். மேற்படி தகவல்கள் பின்வருமாறு,  

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ரத்தத்தில் அதிக டாக்ஸின்ஸ்கள் இருந்தால் தோல் அரிப்பு ஏற்படும். இது முக்கிய அறிகுறியாகும். உடலில் கருமை நிறம் அதிகரிக்கும். எனவே இது போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் முக்கியமாக சாப்பிட வேண்டிய ஒரு ஜூஸ் பற்றி நித்யா கூறுகிறார்.  

மேலும் ரத்தத்தில் அதிக டாக்ஸ்சின்ஸ் இருப்பது சிறுநீர் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சிறுநீரகக் கல் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. சிறுநீரக கல் உருவாவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று ரத்தத்தில் டாக்ஸ்சின்ஸ் அதிகரிப்பது. 

Advertisment
Advertisements

அது மட்டும் இன்றி சொரியாசிஸ், கொழுப்பு கட்டிகள் போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளதாகவும் மருத்துவர் நித்யா கூறுகிறார். நரம்புகள் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படும், கை கால் நடுக்கம், ரத்த ஓட்ட பாதிப்பு என பலவிதமான பிரச்சனைகளுக்கு ரத்தத்தில் உள்ள டாக்ஸின்ஸ்கள் தான் காரணம். 

அதுமட்டுமின்றி இதயத்தில் ஏற்படும் அடைப்புகள் இதயத்திற்கு ரத்த ஓட்டம் செல்வதில் பிரச்சினை உட்பட பலவற்றிற்கும் இந்த டாக்ஸின்ஸ்கள் ஒரு முக்கிய காரணமாகும். எனவே ஆறு மாதத்திற்கு ஒருமுறை 21 நாட்கள் இந்த ஜூசை எடுத்துக் கொள்ளலாம். இந்த ஜூஸ் எடுத்துக்கொள்வதால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். 

இதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் | Blood purification Juice | Dr.Nithya

அடிக்கடி இந்த ஜூஸ் எடுத்துக் கொள்வதால் ரத்தத்தில் உள்ள டாக்ஸின்ஸ்கள் குறையும் இரத்த ஓட்டமும் சீராகும். 

ஜூஸ் செய்முறை: உலர்ந்த திராட்சையை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் உலர்ந்த திராட்சை, எலுமிச்சை சாறு, துளசி பொடி அல்லது துளசி பச்சை இலைகள் மூன்றையும் நன்கு அரைத்து வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் இதை குடிக்கலாம். 

இவற்றில் நம் ரத்தத்தை சுத்தம் செய்வதற்கும் வயிற்றை சுத்தம் செய்வதற்கான திறன்கள் உள்ளது. எனவே இவற்றை எடுத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் அதில் இஞ்சி சிறிது சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை சேர்க்காமல் தேன் கலந்தும் குடிக்கலாம். 

21 நாட்கள் இந்த ஜூஸ் எடுத்துக் கொள்ளும் போது ஒரு சில உணவுகளை தவிர்க்க வேண்டியதும் அவசியம். 21 நாட்களுக்கு நான்வெஜ், புளிப்பு சார்ந்த உணவுகள் எடுப்பதை தவிர்க்கவும். இரவு நேரத்தில் நல்ல உறக்கம் தேவை. 

மேலும் சில வழிகளில் இரத்த டாக்ஸின்ஸ்கள் குறைக்க முடியும். அதற்கு ஆதண்டை கற்பத்தை எடுத்துக் கொள்ளலாம். இதனை காலை மாலை இரண்டு வேலையும் ஐந்து கிராம் தேன் அல்லது வெந்நீரில் கலந்து குடிக்கலாம். 

பரங்கிப்பட்டை பதங்கம் இதை சாப்பிடலாம். இதனை மூன்று சிட்டிகை எடுத்து தேனோடு கலந்து சாப்பிடலாம். இன்றைய காலகட்டத்தில் முதலில் ஏற்படக்கூடிய பல நோய்களுக்கு காரணம் ரத்தத்தில் உள்ள டாக்ஸின்ஸ்கள் தான். எனவே ஆதண்டை கற்பம், பரங்கிப்பட்டையையும் எடுத்துக் கொள்ளலாம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

health Amazing benefits of having soaked dry fruits in the morning

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: