Advertisment

தினமும் 5- 6 பேரிச்சம் பழம்: அட, இந்தப் பிரச்னைக்கு பெஸ்ட் தீர்வு இதுதானாமே?!

கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு பேரிச்சம் பழம் சிறந்த உணவாக உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தினமும் 5- 6 பேரிச்சம் பழம்: அட, இந்தப் பிரச்னைக்கு பெஸ்ட் தீர்வு இதுதானாமே?!

உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும். இன்றைய வாழ்க்கை முறையில் உணவு பழக்கவழக்கம் முற்றிலும் மாறுபட்டுள்ளது. துரித உணவு, ஆரோக்கியமற்ற உணவுகள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பலவித நோய்களுக்கு வழிவகுக்கிறது. உடலில் மாற்றம் ஏற்படுகிறது.

Advertisment

அந்தவகையில் இன்று பெரும்பாலான மக்கள் கொலஸ்ட்ரால் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இதனால் இதயம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகிறது. மருத்துவர்களும் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைக்க வேண்டும், நல்ல கொலஸ்ட்ரால் அளவு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவர். கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு வீட்டிலே, மிக எளிமையான மருந்து உள்ளது என்றால் அது பேரிச்சம் பழம். பேரிச்சம் பழம் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி, ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவுகிறது எனக் கூறுகின்றனர்.

பேரிச்சம் பழத்தில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. கனிமங்கள், சர்க்கரை, கால்சியம், இரும்பு, பொட்டாசியம் போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளன. பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. நாள் முழுவதும் உடலின் ஆற்றல் சுழற்சியை ஊக்குவிக்கின்றன. பேரிச்சம் பழம் தாவரப் பொருட்கள் போல, கொலஸ்ட்ரால் இல்லாத உணவு பொருள்.

அசைவ உணவுகள், வெண்ணெய், பாலாடைக்கட்டி போன்ற விலங்கு சார்ந்த உணவுகளில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், உணவில் பேரிச்சம் பழம் எடுத்துக் கொள்வது சிறந்தது. இதயம் சார்ந்த நோய்களுக்கு உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு சீர் இல்லாமை முக்கிய பங்கு வகிக்கிறது.

பேரிச்சம் பழத்தின் நன்மைகள்

பேரிச்சம் பழம் எல்.டி.எல் என்கிற கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, ரத்த நாளங்களைச் சுத்தப்படுத்தி, இதயத்தில் கொழுப்புகள் சேராமல் பார்த்து கொள்கிறது. தினமும் பேரிச்சம் பழம் உட்கொள்வது நல்லது. சீரான, ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவும்.

பக்கவாதம், இதயம் சார்ந்த பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை தடுக்க பேரிச்சம் பழம் உதவுகிறது. பேரிச்சம் பழத்தில் ஜிங்க், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இவை உடலுக்கு ஊட்டமளிக்கிறது. ஜிங்க் இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது, மெக்னீசியம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்குகிறது.

தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுங்கள்

பேரிச்சம் பழம் சுலபமாக கிடைக்க கூடிய பொருள். அதிக விலையும் கிடையாது. நாம் இதை வைத்து எதுவும் சமைப்பது இல்லை. தினமும் 5 முதல் 6 பேரிச்சம் பழம் சாப்பிட்டு வர கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Life Healthy Food Tamil News 2 Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment