சாப்பாடுதான் ஒருவரின் உடல் நாள் முழுவதும் எப்படி செயல்படுகிறது என்பதை தீர்மானிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், சாப்பிடும் உணவு தூக்கத்தை கணிசமாக பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? எடுத்துக்காட்டாக, ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவத்தின் படி, ஆல்கஹால் முதலில் ஆழ்ந்த உறக்கத்தை அளிக்க உதவும். ஆனால், ஒருவர் தூங்குவதற்கு முன் அதைத் தவறாமல் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டால் – அது நினைவாற்றல் பிரச்சனைகள், தூக்கத்தில் மூச்சுத்திணறல் மற்றும் தூக்கத்தில் நடக்க வாய்ப்புள்ளது. மேலும், மசாலா மற்றும் காரமான உணவுகளும் தவிர்க்கப்பட வேண்டும், ஏனெனில், அவை நெஞ்செரிச்சலை ஏற்படுத்துவதோடு தூக்கத்தையும் பாதிக்கும்.
கோதுமை ரொட்டி அல்லது ஒரு கிண்ணம் ஓட்ஸ் போன்ற சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்ட உணவுகளை படுக்கைக்கு முன் உட்கொள்ள வேண்டும். ஏனென்றால், அவை தூக்க ஹார்மோனான செரோடோனின் வெளியிடுகின்றன. இதனால், விரைவில் செரிமானம் ஆகும்.
நமது தூக்கத்தின் தரத்தில் உணவுப் பழக்கத்தின் தாக்கத்தைப் பற்றி மேலும் அறிய, நாங்கள் நிபுணர்களை அணுகினோம். ஸ்டெட்ஃபாஸ்ட் நியூட்ரிஷன் நிறுவனர் அமன் பூரி கூறுகையில், “அமிலத்தன்மை நிறைந்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவை வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும். மனநிறைவைத் தரும் உணவுகள், அமைதியான விளைவை அளிக்கக்கூடிய இணை உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.” என்று கூறினார்.
இந்திய உணவைப் பற்றி பூரி மேலும் கூறியதாவது: “இந்திய உணவில் புரதம் குறைவாக உள்ளது. எனவே, ஒவ்வொரு உணவிலும் புரதத்தை சேர்ப்பது ஒரே இரவில் தசை வலிமை அடைவது மற்றும் உடலின் சரியான செயல்பாட்டிற்கு மிகவும் அவசியம். நாம் தூங்கும்போது, உடல் ஒரு வினையூக்க நிலைக்கு செல்கிறது. இதனால், தசைகளுக்கு ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. எனவே, ஒருவர் தனது கடைசி உணவில் புரதத்தை சேர்க்க வேண்டும். அதாவது திருப்தி அடையும் வரை இரவில் தசைகளை பலப்படுத்த வேண்டும்.” என்று கூறினார்.
“தூங்குவதற்கு முன் சரியான திரவ உணவு எடுத்துக் கொள்வது, போதுமான நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுவது, குறிப்பாக எலக்ட்ரோலைட்டுகள், இதனால் இரவில் உடலை சமநிலையில் வைத்திருக்கும்” என்று ஊட்டச்சத்து நிபுணர் கூறினார்.
மும்பை குளோபல் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறையின் இயக்குநரும் தலைவருமான டாக்டர் பிரதீப் ராவ் கூறுகையில், அதிக கார்போஹைட்ரேட் உணவுகள் சாப்பிடுவடு தூக்கத்தைத் தூண்டினாலும், அவை நல்ல இரவு தூக்கத்தை ஊக்குவிக்காது. “எனவே, இரவில் அதிக கார்போஹைட்ரேட் உணவைத் தவிர்ப்பது நல்லது (அரிசி / சப்பாத்தி / ரொட்டி / சர்க்கரை). இரவு உணவை நன்றாக ஜீரணிக்க தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாக இரவு உணவை முடித்துக் கொள்வது நல்லது. அதிக கொழுப்புள்ள உணவும் தூக்கத்தின் போது அசௌகரியத்தை ஏற்படுத்தும். இரவில் அதைத் தவிர்ப்பது நல்லது. எந்தவொரு தூண்டுதலும் தூக்கத்தை பாதிக்கும். இவற்றில் காஃபின் பிரபலமானது. எனவே இரவு உணவிற்குப் பிறகு ஃபில்டர் காபி சாப்பிடுவது தவறான யோசனை” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“