மாதுளை என்பது அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஒன்றாகும். இரத்தசோகை உள்ளவர்கள் முதல் உடற்பயிற்சி செய்பவர்கள் வரை அனைவரும் கட்டாயம் இதை எடுத்து கொள்ள வேண்டும்.
அதிலும் மாதுளையுடன் சேர்த்து கேரட் சாப்பிடுவது நமக்கு மிகவும் நன்மை பயக்கும். இவை இரண்டையும் ஜுஸாக எடுத்து கொள்வதை விட அப்படியே பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இது ரத்தசோகை வராமல் தடுக்கும்.
உடற்பயிற்சி செய்பவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும். மாதுளை, பீட்ரூட், கேரட் மூன்றையும் எடுத்து கொள்வது நம்மை எளிதில் சோர்வடைவதில் இருந்து காக்கும். உடற்பயிற்சி செய்வதால் வரும் உடல்சோர்வு வலி போன்றவற்றை போக்கும்.
மாதுளை: மெக்னீசியம், வைட்டமின் சி, பாஸ்பரஸ், ஃபோலேட், யாட்டாசியம், நார்ச்சத்து உள்ளிட்டவை அதிகளவில் உள்ளன. இவை நமது மூளையின் நினைவாற்றல் உள்ளிட்ட ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியம் மேம்படவும் உதவுகிறது. மாதுளை சாறு நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
மூளை திறன் மேம்படுதல், வாய்ப்புண், செரிமான கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்தும் விடுபட உதவும். இதிலும் சிகப்பு மாதுளை ரத்தத்தை சுத்தம் செய்ய உதவும். சிறுநீரக கல் உருவாகாமல் பாதுகாக்கும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக்கூடிஅய் தன்மையும் உண்டு.
தினமும் மாதுளை சாப்பிடலாமா? | 10 benefits of pomegranate fruit
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“