நத்தை சூரி மூலிகை உண்டு வந்தால் உடலுக்கு எந்தவித நோயும் ஏற்படாது. மேலும் இது உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை குறைக்க உதவும் என்றும் டாக்டர் நித்யா ஆஸ்க் இன்ஃபர்மேஷன் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
இதன் நன்மைகளை அடுக்கி கொண்டே போகலாம். நத்தை சூரி விதைகளை பொன்னிறமாக வறுத்து பொடி செய்து இதனை ஒரு ஸ்பூன் எடுத்து 3 டம்ளர் தண்ணீரில் கலந்து இரு டம்ளர் வரும் வரை கொதிக்கவிட்டு காலையில் குடித்து வர உடலில் தேவையில்லாத கொழுப்பை கரைக்க உதவும் என டாக்டர் நித்யா கூறுகிறார்.
ஆண்களில் சிலருக்கு ஆண்மைக் குறைபாடு, உடல் வெப்பம், அதிக எடை போன்ற பல பிரச்சனைகள் இருக்கும். அதை எளிதில் சரி செய்ய நத்தை சூரி சூரணம் பயன்படும்.
நத்தை சூரி விதை பொடி கலந்த பால் உடல் கழிவுகளை வெளியேற்றும். சிறுநீரகக் கல்லை வெளியேற்றும், இரத்தத்தை சுத்தப்படுத்தும். அதைப் போல நத்தை சூரி விதை பொடியாக்கி தேனில் கலந்து உண்பதால் சீதபேதி, வயிற்றுப்போக்கு குணமாகும்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.