வெந்தயம் என்பது உணவிலும் மனிதனின் ஆரோக்கியத்திற்கும் மிகச் சிறந்தது. வெந்தயம் 10 பெரிய பிரச்சனைகளுக்கு மருந்தாக அல்லாமல் உணவாக எப்படி பயன்படுகிறது என்று பார்க்கலாம்.
1.சர்க்கரை நோய்: ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் வெந்தயம் என்ற அளவில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்று இரவுகள் வெந்தயத்தை முளைக்கட்ட வைத்து அதனை நான்காவது நாள் காலையில் தண்ணீர் விட்டு அரைத்து பால் பிழிந்து சாப்பிடலாம். அல்லது அதை வேக வைத்து சாப்பிடலாம். இதை ரெகுலராக சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கும்.
வெந்தயம் தரும் அற்புத மருத்துவ பயன்களை பற்றி விவரிக்கிறார்..? வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள்
2. சிறுநீரக பாதிப்பு: ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்தயத்தை மென்று சாப்பிட்டு வர சிறுநீரக பிரச்சனை, சிறுநீர் மண்டல பிரச்சனைகள் நீங்கும்.
3. உடல் எடை குறைவு: வெந்தயத்தை சாப்பிடும் போது அதன் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும். பித்தத்தின் சீற்றம் குறைந்து தேவையற்ற உணவுகளின் மீது வரக்கூடிய அந்த கிரேவிங் போகும்.
4 மலச்சிக்கல்: வெந்தயத்தில் தண்ணீரில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் மாலையில் தண்ணீரில் ஊற வைத்து இரவு தூங்கும் முன்பு குடித்தால் அது நேரடியாக மலக்குடலை அடைந்து காலையில் வயிற்றில் உள்ள் கழிவுகளை வெளியேற்றும்.
5. மாதவிடாய் கோளாறுகள்: இரவு வெந்தயத்தை ஊற வைத்து காலையில் அதை மென்று அந்த தண்ணீரை குடித்தால் போதும். மூன்று மண்டலங்களுக்கு அதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர மாதவிடாய் வலி மற்றும் பிற கோளாறுகளும் நீங்கும்.
6. உடல் சூடு: வெந்தயத்தை உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும். இதை காலையில் வெறும் வயிற்றிலும் எடுத்து கொள்ளலாம்.
7. மூலம்: இரவு படுக்கும் போது காலை எழும்போது எப்போதும் ஒரு கரண்டி வெந்தயத்தை சாப்பிட்டால் போதும் உங்களுக்கு மூலம் பிரச்சனை அதனால் ஏற்படும் வலி சரியாகும்.
8. வயிற்றுப்பூச்சி: குழந்தைகள் இனிப்பு, ஐஸ்கிரீம் போன்ற உணவுகளை சாப்பிடுவதால் வயிற்றில் பூச்சி தொல்லை இருக்கும். அப்படி இருக்கும் ஐந்து வயது குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு ஒரு சிட்டிகை வெந்தயத்தை தேனில் கலந்து கொடுக்கலாம். ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைங்களுக்கு ஒரு தேக்கரண்டி கொடுத்து வர குழந்தைகளின் வயிறு சுத்தமாகும் இதனால் வயிற்றுப் பூச்சி, வயிற்று வலி நீங்கும்.
9. மூட்டு வலி, வாயு தொல்லை: புற்றுநோய், வாய்வுத் தொல்லை, மூட்டு வலி, முதுகு வலி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வர இந்த பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். இடுப்பு வலி வரும் பெண்கள் இதனை சாப்பிட அந்த வலி நீங்கும்.
10. தோல், முடி ஆரோக்கியம்: குளிக்க தயார் செய்யும் நலுங்கு மாவுடன் வெந்தயம் சேர்க்கலாம். தோல் நோய்கள் குணமாகும். மேலும் கரிசலாங்கண்ணி இலை மற்றும் வெந்தயம் அரைத்து தலையில் தேய்ப்பதன் மூலம் முடி வளர்ச்சிக்கு உதவும்.
வெந்தயத்தை சாப்பிடுவதன் மூலமே அனைத்து பிரச்சனைகளும் குணமாவதை பார்க்க முடியும். உணவில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். காலை வெறும் வயிற்றில் எப்போதும் வெந்தயம் சாப்பிடுவதை ஒரு பழக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது உடலில் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வரும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“