/indian-express-tamil/media/media_files/2025/02/06/PYWnlc0IEqghXcbjgpTM.jpg)
தொப்பையை குறைக்க 5 வழிகள்
உடல் எடை சரியாக இருக்குக்கிறது. ஆனால் தொப்பையும் வயிற்று பகுதியில் சதையும் மட்டும் தொங்குகிறது என்பது பலரின் குறையாக இருக்கலாம்.
குழந்தை பிறந்த சில பெண்களுக்கு கூட வயிற்றுப் பகுதியில் சதை இருக்கும். அதை குறைக்க ஈஸியான வழியை தேட்க்கொண்டு இருப்பார்கள் அப்படிப்பட்டவர்களுக்கு மிஸ்டர் லேடிஸ் யூடியூப் சேனலில் டாக்டர் தீபா கூறியிருப்பதாவது,
உடல் எடையை குறைக்க வேண்டும். ஆனால் அதை எளிமையான உணவு பழக்கம் மூலமாக குறைக்க விரும்புகிறீர்களா? அப்போ இந்த 5 முக்கியமான உணவு குறிப்புகளை பின்பற்றலாம் என்று மருத்துவர் கூறுகிறார்.
1. வெந்தயம்- வெந்தயத்தை முளைக்கட்டி வைத்து பின்னர் அதனை காயவைத்து ஈரப்பதம் இல்லாத அலவு காய்ந்ததும். அதை எடுத்து மிக்ஸி ஜாரில் மைய அரைத்து ஒரு கண்ணாடி பவுலில் வைத்து கொள்ளலாம். அதனை தினமும் வெந்நீரில் கலந்து குடிக்கலாம். வயிறு நிறைவாக இருக்கும் உடல் எடை கூடாது.
2. சுக்கு - உடல் உஷ்ணத்தை அதிகரித்து எடை குறைப்புக்கு உதவும். இதை அரைத்து ஒரு நாளைக்கு ஒரு முறையாவது டீயில் சேர்த்து கலந்து குடிக்கலாம். இல்லையென்றால் வெந்நீரில் போட்டு சிறிது இனிப்பு அல்லது தேன் சேர்த்து குடிக்கலாம். கொழுப்பை கரைக்கும்.
வெந்தியம் ஒன்றே போதும்|Thoppai kuraya | Belly fat buster |Health tips |Dr.Deepa Arulaalan| Mr Ladies
3. ஆப்பிள் - காலை உணவை தவிர்த்து விட்டு ஆப்பிளை நறுக்கி சாப்பிடலாம். காலையில் ஒரு பெரிய ஆப்பிளை சாப்பிடலாம். வயிறு நிறைவாக இருக்கும். அதிக உணவு சாப்பிடுவதை தவிர்க்கும்.
4. சுருள் பட்டை - பட்டை யை அரைத்து காலையில் இரவு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிடலாம். உடலில் நோய் வராமல் தடுக்கும். மேலும் உடலில் ஆங்காங்கே உள்ள தங்கி இருக்கும் கொழுப்பை கரைக்க உதவும்.
5. பார்லி - இந்த பார்லியை நன்கு வேகவைத்து கிச்சடி மாதிரி செய்து சாப்பிடலாம். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். பார்லி கிச்சடியுடன் காய்கறிகள் மற்றும் ஸ்பைசஸ் சேர்த்து சுவையாகவும் சாப்பிடலாம் என்று மருத்துவர் தீபா கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.