உடல் சூட்டை தணிக்க எங்கேயும் போக வேணாம்... கொஞ்சூண்டு வெந்தய குழம்பு வச்சு சாப்பிடுங்க!

உடல் சூட்டை குறைக்க உதவும் வெந்தய குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

உடல் சூட்டை குறைக்க உதவும் வெந்தய குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
வெந்தய குழம்பு

வெந்தய குழம்பு

வெந்தயம் என்றாலே உடல் சூட்டை குறைக்கும். அதுமட்டுமின்றி மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, நீர் சத்து, புரதச் சத்து போன்றவை வெந்தயத்தில் அடங்கியுள்ளது. இது தவிர சுண்ணாம்புச்சத்து, சோடியம் சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்ற தாது பொருட்களும், ரிபோபிளேவின், தயாமின், வைட்டமின் ஏ, போன்ற சத்துகளும் அடங்கியுள்ளன. இத்தனை சத்துக்கள் அடங்கியுள்ள் வெந்தயத்தை வைத்து சிறிதும் கசப்பு இல்லாத வெந்தய குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

வெந்தயம்
மிளகு
சீரகம்
அரிசி
எண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு
வெந்தயம்
சின்ன வெங்காயம்
பூண்டு
கருவேப்பிலை
நறுக்கிய வெங்காயம்
உப்பு
மஞ்சத்தூள்
மிளகாய் தூள்
கொத்தமல்லி தூள்
புளிக்கரைசல்
வெல்லம்
 
செய்முறை

ஒரு அடி கனமான பாத்திரத்தில் சீரகம், அரிசி, வெந்தயம், மிளகு நான்கையும் சேர்த்து டிரை ரோஸ்ட் செய்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பின்னர் அதை எடுத்து தனியாக வைத்துவிட்டு அதே பாத்திரத்தில் பாத்திரத்தில் எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

Advertisment
Advertisements

பின்னர் தோல் உரித்த பூண்டு, கருவேப்பிலை சேர்த்து நிறம் மாறி வந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கும் போது எண்ணெய் பிரிந்து வரும் அப்போது மஞ்சத்தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், பின்னர் வறுத்த அறைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து வதக்கி விடவும்.

ருசியான வெந்தய குழம்பு ஒருமுறை செய்ங்க | Vendhaya Kulambu Recipe In Tamil |

மசாலாக்கள் பச்சை வாசம் நீங்கியதும் புளிக்கரைசலையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு கடைசியில் சிறிது வெள்ளம் சேர்த்து கலந்து விடவும். பின்னர் தண்ணீர் பற்றி கெட்டியான கொதிக்க விட்டால் வெந்தய குழம்பு ரெடியாகி விடும். இதனை சுடு சாதத்திற்கு வைத்து சாப்பிடலாம். இதனை இட்லி தோசைக்கும் சேர்த்து சாப்பிடலாம் நன்றாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Benefits of consuming fenugreek Fenugreek Seeds

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: