குளிர்காலத்தில் உணவுமுறையில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, தற்போது 400 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, நீரிழிவு நோயை ஒழிக்க முடியாது. எனவே, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த நமது அன்றாட உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நிர்வகிப்பதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. சரியான உணவு, சரியான அளவு மற்றும் சரியான நேரத்தில் சாப்பிடுவது ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
ஆனால், குளிர்காலத்தில் ஆரோக்கியமான உணவைப் பராமரிப்பது சவாலானது. பலர் க்ரீஸ் மற்றும் ருசியான உணவுகளை உலகின் இந்த நேரத்தில் சாப்பிடுகிறார்கள். குளிர்ச்சியான வானிலையில், சிலர் சர்க்கரை, எண்ணெய் மற்றும் ஆரோக்கியத்திற்கு கேடான அனைத்தையும் சாப்பிடுகிறார்கள். இவை அனைத்தும் வளர்சிதை மாற்ற செயல்முறையை மெதுவாக்குகின்றன. மேலும், சர்க்கரையின் ஏற்ற இறக்கத்திற்கு வழிவகுக்கிறது. ஆனால், கவலைப்பட வேண்டாம். இதற்கு, ஒரு அற்புதமான தீர்வு உள்ளது.
அன்றாட உணவில் பருவகாலங்களுக்கு ஏற்பட காய்கறிகள், மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் சேர்க்கப்பட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில், அவை பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க முக்கியமான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கின்றன. அத்தகைய ஒரு ஆரோக்கியமான பொருள்தான் வெந்தயம்.
பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் வெந்தயம்
நீரிழிவு நோயை நிர்வகிக்க வெந்தயம் எவ்வாறு உதவுகிறது என்றால், வெந்தயத்தில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான செயல்முறையை மெதுவாக்க உதவுகிறது. இது கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரையை உறிஞ்சுவதை மேலும் ஒழுங்குபடுத்துகிறது. வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து ஆராய்ச்சிக்கான சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வெந்நீரில் 10 கிராம் வெந்தயத்தை தினமும் ஊறவைத்து சாப்பிட்டா 2-ம் வகை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று கூறுகிறது. பெங்களூரைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் அஞ்சு சூட் கூறுகையில், “வெந்தயம் இன்சுலின் எதிர்ப்பைச் சமாளிக்க உதவக்கூடும். இது மிகவும் பலன் அளிக்கக் கூடியதாகவும் செயல்திறன் உடையதாகவும் ஆக்குகிறது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. பொதுவாக வெந்தயம் நீரிழிவு நோயாளிகளால் பயன்படுத்தப்படுகிறது.” என்று கூறுகிறார்.
அதுமட்டுமில்லாமல், வெந்தயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஆன்டி-வைரல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், உள்ளிருந்து உடலை சூடேற்றவும் மற்றும் உடலுக்கு ஒட்டுமொத்த ஊட்டச்சத்தை அளிக்கவும் உதவுகின்றன. இந்த குளிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகளின் உணவில் வெந்தயத்தை சேர்ப்பதற்கு வெந்தய டீ தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
வெந்தயத்தை பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வெந்தயப் பொடியை சேர்த்து கொதிக்க வைக்கவும். இனிப்புக்கு சிறிது தேன் சேர்த்துக்கொள்ளுங்கள். வழக்கமாக பயன்படுத்தும் டீ தூள் மற்றும் பிற மூலிகைகளையும் அதில் சேர்க்கலாம். மூடி வைத்துவிட்டு, அடுத்த மூன்று நிமிடங்களுக்கு பிறகு, கோப்பையில் வடிகட்டி குடிக்கவும். இதை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த குளிர்கால மூலிகையை சிறந்த முறையில் பயன்படுத்துங்கள். ஆனால், நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் புதிதாக எதையும் சேர்க்கும் முன் எப்போதும் மருத்துவரிடம் ஆலோசனை பெற மறக்காதீர்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"