தென்னம்பூவுடன் மோர் சேர்த்து பருகுவது கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும். தென்னம்பூவில் உள்ள மருத்துவ குணங்களும், மோரில் உள்ள ஊட்டச்சத்துக்களும் இணைந்து கர்ப்பப்பைக்கு வலிமை அளிக்கும் என்பது அவரது கருத்தாகும். இந்த எளிய வீட்டு வைத்தியத்தை பின்பற்றுவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என டாக்டர் ஜெயரூபா ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
Advertisment
கர்ப்பப்பை பலம் குறைய காரணங்கள்:
டெலிவரிக்குப் பிறகு தசைகள் பலம் இழப்பது தொடர்ச்சியான ஹார்மோன் மாற்றங்கள் மாதவிடாய் தள்ளிப் போக மாத்திரைகள் பயன்படுத்துவது அதிக எடை தூக்கும் செயல்கள் கர்ப்பப்பையில் கட்டிகள், வீக்கம்
இந்த காரணங்கள் கர்ப்பப்பையை பலவீனமாக்கி, மாதவிடாய் உதிரப்போக்கு அதிகரிக்கும், அடிவயிற்றில் வலி ஏற்படும், மேலும் சிலருக்கு கர்ப்பப்பை கீழே இறங்கும் அபாயமும் உண்டு என டாக்டர் ஜெயரூபா கூறுகிறார். இதை சரிசெய்ய தென்னம்பூ மோர் குடிக்க வேண்டும் என்றும் அதை தயாரிப்பது பற்றியும் டாக்டர் கூறுகிறார்.
Advertisment
Advertisements
தேவையான பொருட்கள்:
ஒரு கைப்பிடி அளவு தென்னம்பூ மோர் இந்துப்பு ஒரு சின்ன வெங்காயம்
செய்முறை:
தென்னம்பூ, மோர், உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். இதை வடிகட்டி, காலை வெறும் வயிற்றில் பருகவும். இது மாதவிடாய் தொடங்கிய முதல் 3 நாட்களுக்கு தொடர்ந்து எடுத்தால் சிறந்த பலன் கிடைக்கும் என்கிறார்.
இந்த தென்னம்பூ மோர் கர்ப்பப்பையை பலப்படுத்தும், மாதவிடாய் உதிரப்போக்கு கட்டுப்படும். மேலும் ஹார்மோன் சமநிலையை பாதுகாக்கும். பெண்கள் மட்டுமின்றி ஆண்களின் விந்தணுக்களின் வலிமையையும் அதிகரிக்க இதை குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.