சுகர் பேஷன்ட்ஸ் நோட் ப்ளீஸ்… உங்க காலை உணவு இப்படி இருக்கணும்!
Best 3 breakfast for sugar patients in tamil: சத்தான காலை உணவைத் தேர்ந்தெடுப்பது, உங்களை நிறைவாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
Best foods to eat with diabetes in tamil: காலை உணவு ஒரு நாளின் மிக முக்கியமான உணவாக கருதப்படுகிறது. இருப்பினும், பெரும்பாலான மக்கள் அதை தவிர்த்து வருகிறார்கள் மற்றும் சரியான காலை உணவை சாப்பிடுவதில்லை. நீரிழிவு உள்ளவர்களுக்கு, காலை உணவு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில் இது நாள் முழுவதும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. அன்றைய முதல் உணவு, நாள் கடக்கும்போது அவர்கள் எப்படி உணருவார்கள் என்பதற்கான தொனியைக் குறிக்கிறது.
Advertisment
சத்தான காலை உணவைத் தேர்ந்தெடுப்பது, உங்களை நிறைவாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நீரிழிவு நோய்க்கு உகந்த காலை உணவில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.
அந்த வகையில் இங்கு நாங்கள் சிறந்த காலை உணவு ரெசிபிகளின் பட்டியலைக் கொண்டு வந்துள்ளோம், அவை சுவையில் மட்டுமல்ல, ஆரோக்கியமான வாழ்க்கையை பராமரிக்கவும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.
ஓட்மீல்:
ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், ஒரு கிண்ணம் ஓட்ஸ் ஒரு நல்ல காலை உணவாக இருக்கும். இது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இது உடனடியாக செயலாக்கப்படும்.
ஒரு பங்கு ஓட்மீலை இரண்டு பங்கு தண்ணீர் அல்லது குறைந்த கொழுப்புள்ள பாலுடன் கலந்து, அதன் மேல் பழங்கள் மற்றும் பருப்புகள் சேர்த்து, கூடுதல் புரதச் சத்துக்காக, ஒரு கிரீமிக் கிண்ண ஓட்மீலை புதிய காலை உணவாகத் தயாரிக்கலாம்.
முட்டை சாண்ட்விச்:
ஒரு முட்டையில் 6 கிராம் புரதம் உள்ளது. புரதம் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும் என்பதால், முழு கோதுமை, துருவிய முட்டை, குறைந்த கொழுப்புள்ள சீஸ் மற்றும் தக்காளி துண்டுகள் கொண்ட சாண்ட்விச் ஒரு சரியான காலை உணவாக இருக்கும். இது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். இறைச்சியின் ஒரு சிறிய துண்டைச் சேர்ப்பதன் மூலம் இதன் சுவை சிறப்பாக இருக்கும் மற்றும் சில கூடுதல் புரதங்கள் கிடைக்கும்.
மேத்தி அல்லது வெந்தய பரோட்டோ:
அதிக நார்ச்சத்து நிறைந்த மெத்தி அல்லது வெந்தயத்தால் நிரப்பப்பட்ட பரோட்டோ நீரிழிவு நோயாளிகளுக்கு சரியான காலை உணவாக இருக்கும். ஆனால் பராட்டாவை பொரிக்க தாவர எண்ணெயைப் பயன்படுத்துவதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் சந்தையில் கிடைக்கும் மோசமான, தரமற்ற, மற்றும் சுத்திகரிக்கப்படாத எண்ணெய்கள் எடை அதிகரிப்பு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil