பாலை விட அதிக கால்சியம் சத்து… இந்த உணவுகளை நோட் பண்ணுங்க; டாக்டர் பொற்கொடி

நம் உடலுக்கு தேவையான சத்துக்களில் மிகவும் முக்கியமான சத்து ஒன்று கால்சியம். பாலில் தான் மிகவும் அதிகமாக கால்சியம் இருப்பதாக நினைக்குறோம். ஆனால் அதை விட அதிகம் கால்சியம் இருக்கும் உணவுகளை பற்றி டாக்டர் பொற்கொடி கூறுகிறார்.

நம் உடலுக்கு தேவையான சத்துக்களில் மிகவும் முக்கியமான சத்து ஒன்று கால்சியம். பாலில் தான் மிகவும் அதிகமாக கால்சியம் இருப்பதாக நினைக்குறோம். ஆனால் அதை விட அதிகம் கால்சியம் இருக்கும் உணவுகளை பற்றி டாக்டர் பொற்கொடி கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
calcium

எலும்புகள் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிக முக்கியம். எலும்பு நன்றாக இருக்க வேண்டும் என்றால், பால் நிறைய குடிக்க வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்த்து இருப்பார்கள். பாலில் அதிக கால்சியம் சத்து உள்ளது என்றும் சொல்வார்கள். ஆனால் பாலை விட சத்து நிறைந்த சில உணவுகளை பற்றி டாக்டர் பொற்கொடி தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார். 

Advertisment

கேழ்வரகு: ராகிக் கூழ், கேழ்வரகில் இருந்து செய்யப்படுவதால், மற்ற தானியங்களை விட அதிக கால்சியம் சத்து உள்ளது, இது எலும்புகளுக்கு நல்லது. மேலும், ராகியில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம் போன்ற சத்துக்களும் அதிகம் உள்ளன, அவை உடலுக்கு பல நன்மைகளைத் தருகின்றன.

முருங்கை கீரை: பாலை விட முருங்கை கீரையில் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக கால்சியம் சத்துள்ளது. ஆகையால் தினமும் பால் அருந்த முடியாதவர்களுக்கு இது சிறந்த மாற்றாக இருக்கும். முருங்கை கீரையில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் இ அதிகமாக உள்ளது. அதேப்போல் கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது.

பிரண்டை: பிரண்டையி்ல் கால்சியம் மிக அதிக அளவில் இருக்கிறது. இதனா்ல் இது கால்சியம் பற்றாக்குறையைத் தீர்க்கிறது. பெண்களுக்கு 40 வயதைத் தாண்டும் போது எலும்புத் தேய்மானம், எலும்பின் அடர்த்தி குறைதல் மற்றும் கால்சியம் பற்றாக்குறை அதிக அளவில் ஏற்படுகிறது. இதை சரிசெய்யவும் பிரண்டை உதவுகிறது.

Advertisment
Advertisements

கறிவேப்பிலை: கறிவேப்பிலையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மக்னீசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, அமினோ அமிலங்கள், கிளைக்கோஸைடுகள் என உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதிலுள்ள `கார்பசோல்’ ஆல்கலாய்டுகள், செல்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஃப்ரீ- ரேடிக்கல்களை அழித்து, புற்றுநோய் தாக்காமல் பார்த்துக்கொள்ளும்.

கசகசா: கசகசா உங்கள் உணவுக்கு ஒரு சுவையான தேர்வாக மட்டுமல்லாமல், அவை கால்சியத்தின் சிறந்த மூலமாகவும் பெருமை பேசுகின்றன. பால் மற்றும் தயிருடன், உங்கள் உணவில் கசகசாவைச் சேர்ப்பது உங்கள் கால்சியம் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்யும். கூடுதலாக, இதில் இரும்புச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளும் நிறைந்துள்ளன. கசகசாவைத் தொடர்ந்து சாப்பிடுவது உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

கொண்டைக்கடலை: கொண்டைக்கடலையில் கால்சியம், நார்ச்சத்து, புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன, குறிப்பாக எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் முக்கியமானது.

எள்: எள்ளில் கால்சியம் மிக அதிக அளவில் இருக்கிறது. அதோடு மக்னீசியமும் நிறைந்து இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சியிலும் உறுதிப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

calcium

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: