டெஸ்டோஸ்டிரோன் ஆண்களுக்கு அவர்களின் தசை உடலமைப்பு, ஆழ்ந்த குரல், முடி வளர்ச்சி மற்றும் விநியோகம் உள்ளிட்ட ஆண்பால் அம்சங்களை வழங்குகிறது. ஆனால் இந்த ஹார்மோன் குறைவதால் இவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இந்த ஹார்மோனை அதிகரிக்கவும் சமநிலையில் வைக்கவும் டாக்டர் யோகவித்யா தனது யூடியூப் பக்கமான எத்னிக் ஹெத்கேர் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
வைட்டமின் டி குறைபாடு உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் அளவை பாதிக்கும். டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்க இயற்கையான சப்ளிமெண்ட்டுகளும் எடுத்து கொள்ளலாம். குறிப்பாக முருங்கைபூ, முருங்கை விதை, கொத்தமல்லி தழை, சின்ன வெங்காயம் ஆகியவற்றை எடுத்து கொள்ளலாம் என்று டாக்டர் யோகவித்யா கூறுகிறார்.
பால், முட்டை - டெஸ்டோஸ்ட்ரானின் கட்டுமானப் பொருளான கொலஸ்ட்ரால் இதில் நிரம்பியுள்ளது. இவை உயர் புரதத்தையும் வழங்குகின்றன. மேலும் இவை தசை வலிமை மற்றும் ஹார்மோன் சமநிலைக்கு உதவுகிறது.
பூசணி விதைகள் மற்றும் அனைத்து விதமான நட்ஸ் &சீட்ஸ்: இதில் உள்ள ஜிங்க் சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவும். பூசணி விதை விந்தணுக்களின் தரத்தையும் மேம்படுத்துகிறது. அவற்றில் மெக்னீசியம் உள்ளதால், எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
Advertisment
Advertisements
பீட்ரூட் & மாதுளை: ஆண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான சில குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் மாதுளையில் உள்ளன. மாதுளையில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
அவகேடோ: இதனை சாப்பிடுவதால் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகரிப்பதோடு இதயம் ஆரோக்கியமாக இருக்கும். கொழுப்பை எரித்து ஆற்றலை கொடுக்கும். செரிமானத்தை மேம்படுத்தும்.
இதுதவிர சாரப்பருப்பு, தண்ணீர்விட்டான் கிழங்கு மற்றும் தர்பூசணி பழமும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகரிக்க செய்யும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.