/indian-express-tamil/media/media_files/2025/06/09/8KARETO2WVO8rTPfOTQK.jpg)
40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு உடல் எடை குறைப்பு, எலும்புகளை வலுப்படுத்துதல் மற்றும் மெனோபாஸ் அறிகுறிகளைக் குறைப்பதற்கு உதவும் ஐந்து சிறுதானியங்களைப் பற்றி டாக்டர் ஜெயரூபா ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்க்கலாம்.
0 வயதுக்கு பிறகு பெண்களுக்கு மெட்டாபாலிசம் குறையத் தொடங்கும். எடை அதிகரிக்கும், எலும்புகள் பலவீனமாகும், மூட்டுகளில் வலி வந்து தூக்கம் கெடும், மன அழுத்தம் அதிகரிக்கும். இதனால் நாம் உடலை இன்னும் கவனிக்க வேண்டும் என அவர் கூறுகிறார்.
இந்த கால கட்டத்தில் உணவே மருந்தாகிறது. அதற்கேற்ப, பெண்கள் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டிய 5 சிறுதானியங்களை இப்போது பார்ப்போம்.
1. கேழ்வரகு (ராகி)
100 கிராம் ராகியில் , 340 mg கால்சியம் உள்ளது. இது எலும்புகளுக்கு பலம் தரும்.
கேழ்வரகு, உளுந்து, சீரகம் சேர்த்து பொடி செய்து சத்துமாவாக காலை/மாலை கஞ்சியாக எடுத்துக் கொள்ளலாம்
2. கம்பு
இரும்புசத்து, ஜிங்க், மெக்னீசியம் நிறைந்தது. மெனோபாஸ் காலங்களில் உடலில் ஏற்படும் சூட்டை சமன்செய்யும். கம்பங்கூழ் அல்லது ஊறவைத்து அரைத்து அடை/தோசையாக சாப்பிடலாம்.
3. குதிரைவாலி
எளிதாக செரிக்கும் சிறுதானியம். உப்புசம் ஏற்படுத்தாது, செரிமான பிரச்சனைகள் வராமல் இருக்கும். குதிரைவாலி பொங்கல் அல்லது கஞ்சியாக சாப்பிடலாம்.
4. சாமை
ஃபைப்ரோசிஸ், எண்டோமெட்ரியோசிஸ் போன்ற பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு சிறந்தது. கல்லீரல் பாதுகாப்பு + ஹார்மோன் சீராக்கம். சாதம், உப்புமா, கிச்சடி போல செய்து சாப்பிடலாம்.
5. திணை
Premenstrual syndrome (PMS) பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு. மார்பகம் வலி, தூக்கமின்மை, கால் வலி, மனநிலை மாற்றம் போன்றவை குறையும். திணை லட்டு அல்லது திணை பொங்கல் சாப்பிடலாம்
சிறுதானியங்களில் ஆண்டி நியூட்ரியன்ட்ஸ் அதிகம். அவற்றை 3 முதல் 4 மணி நேரம் நன்றாக ஊறவைத்து மட்டுமே சமைக்க வேண்டும். சிறுதானிய உணவுகளை மோர் கலந்து சாப்பிடுவது சிறந்தது. இதில் உள்ள நார்ச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் B காம்ப்ளெக்ஸ், இரும்புசத்து, கால்சியம் போன்றவை ஹார்மோன்களை சமப்படுத்தும், தூக்கத்தை சீராக்கும், எலும்புகளுக்கு வலு தரும், மனஅழுத்தம் குறைக்கும்.
சிறுதானியம் சாப்பிட ஆரம்பியுங்கள் மெனோபாஸை எளிமையாக கடக்கலாம் என்று டாக்ட்ர் ஜெயரூபா கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.