வெயிலின் உஷ்ணத்தை குறைக்க வேண்டுமா? அப்போ இந்த மாதிரி உணவு எடுத்துக்கோங்க - டாக்டர் ஜெய ரூபா
வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. அவ்வளவு தான் உடல் சூட்டினால் பல பிரச்சனைகள் வரும் அவற்றை தவிர்க்க டாக்டர் ஜெயரூபா சாப்பிட வேண்டிய முக்கிய உணவு பற்றி கூறுகிறார்.
வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. அவ்வளவு தான் உடல் சூட்டினால் பல பிரச்சனைகள் வரும் அவற்றை தவிர்க்க டாக்டர் ஜெயரூபா சாப்பிட வேண்டிய முக்கிய உணவு பற்றி கூறுகிறார்.
வெயில் காலத்தில் உடலின் உஷ்ணத்தை குறைக்க சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகளில் ஒன்றாக கம்பு உள்ளது. இதனை கஞ்சி, சாதம் மாதிரி செய்து சாப்பிடலாம். மேலும் கம்புவின் பயன்கள் பற்றி டாக்டர் ஜெயரூபா ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
Advertisment
நம்ம உடம்பு சுத்தமாக இருக்கணும்னா, குடல் தூய்மையாக இருக்கணும். அதை உணர்ந்தே நம்ம முன்னோர்கள், கம்பு மாதிரியான இயற்கை உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள் என்கிறார் மருத்துவர்.
கம்பு குடலை மட்டும் சுத்தம் செய்வதற்காக அல்ல, அது நம்ம உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும், தசைகளுக்கு நல்ல பலத்தையும் தரும். சித்தர்கள் சொல்லி இருக்கிற மாதிரி, மலச்சிக்கல், செரிமான கோளாறு, உடல் சூடு அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை சரி செய்ய கம்பு கூழ் அசத்தலான தீர்வா இருக்கும்.
கம்பு உணவாக எடுக்கும்போது கவனிக்க வேண்டியவை
1. ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் – குறைந்தது 5-6 மணி நேரம் ஊறவைத்து சமைத்தால்தான் செரிமான பிரச்சனைகள் ஏற்படாது. 2.சேர்க்கவேண்டியவை – சுக்கு, இஞ்சி, சிறிய வெங்காயம், நெய், இந்து உப்பு சேர்த்து எடுத்தால் செரிமானத்திற்கு நல்லது. 3.தவிர்க்க வேண்டியவர்கள் - சிறுநீரக கல் (Kidney Stones) பிரச்சனை உள்ளவர்கள், அதிக தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தினசரி சாப்பிடக் கூடாது.
Advertisment
Advertisements
கம்பு உடலுக்கு தரும் பலன்கள்
குடல் சுத்தமாகும் – மலச்சிக்கல் நீங்கி, உணவு செரிமானம் சிறப்பாகும்.
உடல் சூடு கட்டுப்படும் – வெப்பநிலை சரியாகி, உஷ்ணம் குறையும்.
தசை வளர்ச்சி அதிகரிக்கும் – உடல் பலம் அடையும்.
மன அழுத்தம் (Stress) குறையும் – இயற்கை உணவுகள் மனநிலையைச் சமதளப்படுத்தும்.
நல்ல இரவுத் தூக்கம் வரும் – உடல் மென்மையாகி, சோர்வு நீங்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.