எல்லா சமையலறையிலும் மிகவும் பொதுவாக காணப்படும் பொருட்களில் ஒன்று பூண்டு. பல ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றது பூண்டு. உணவில் ஏன் பூண்டை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்களை இங்கே தருகிறோம். ஆனால், அதே நேரத்தில், மிதமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது முக்கியமானது.
உணவில் பூண்டை சேர்ப்பதற்கான 5 காரணங்கள்:
பூண்டில்ஆரோக்கிய நன்மைகள் நிறைய உள்ளன. ஒவ்வொரு பூண்டு பற்களிலும் சுவையும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. யு.எஸ்.டி.ஏ கருத்துப்படி, ஒவ்வொரு 100 கிராம் பூண்டும் உங்களுக்கு 150 கலோரிகள், 33 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 6.36 கிராம் புரதம் ஆகியவற்றைக் கொடுக்கும் என்று என்று கூறுகிறாது. பூண்டில் வைட்டமின்கள் B1, B2, B3, B6, C, ஃபோலேட், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றால் செறிவூட்டப்பட்டுள்ளது.
சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி, இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. பூண்டு இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. வீக்கம், நச்சுகள் மற்றும் முகப்பரு பிரச்சினைகளை குறைக்கிறது. நீங்கள் அதிகாலையில் வெதுவெதுப்பான நீரில் இரண்டு பல் பச்சை பூண்டு எடுத்துக்கொண்டு, நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கலாம்.
பூண்டு குளிர் மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கிறது. பூண்டு அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் ஆதாரமாக இருக்கிறது. பூண்டு சளி மற்றும் காய்ச்சல் உட்பட பல பருவகால நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு 2-3 பல் பச்சை பூண்டு அல்லது சமைத்த பூண்டை எடுத்துக் கொள்ளலாம் அல்லது சிறிது பூண்டு தேநீரைப் பருகலாம் (தேன் அல்லது இஞ்சியைக் கலந்து சுவையைக் கூட்டலாம்).
பூண்டு இதய ஆரோக்கியத்தை நிர்வகிக்கிறது. பூண்டில் அல்லிசின் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளது. சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி, பூண்டு உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். உடலின் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை சீராக்கி நன்மை பயக்கும்.
பூண்டு தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பூண்டின் புத்துணர்ச்சியூட்டும் பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களின் விளைவிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. சருமத்தில் கொலாஜன் குறைவதை மெதுவாக்குகிறது. இது வயதானவர்களின் சருமத்தில் சுருக்கத்தைக் குறைக்க வழிவகுக்கிறது.
பூண்டு ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு பலன்களைக் கொண்டது. பூண்டு காலங்காலமாக சிறந்த மருத்துவப் பொக்கிஷங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பூண்டு பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க ஆண்டிபயாடிக் ஆகப் பயன்படுத்தப்படுகிறது. நீர்த்த பூண்டு சாறு நாடாப்புழு தொற்று உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“