/indian-express-tamil/media/media_files/2025/03/14/sz5Fqky5bknSp7MBnZl6.jpg)
கோடை காலம் முழுமையாக தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு ஊர்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த சூழலில் பல்வேறு நோய்த் தொற்றுகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சரியாக தண்ணீர் குடிக்காமல் இருந்தால் சிறுநீர் பாதை தொற்று ஏற்படக் கூடும் என்று மருத்துவர் நந்தினி தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி தினசரி குடிக்கும் டீ மற்றும் காபியில் இருக்கும் சர்க்கரையின் அளவு, சர்க்கரை நோய், காய்ச்சல் ஆகியவற்றால் கூட சிறுநீர் பாதை தொற்று ஏற்படலாம்.
சிறுநீர் வெளியேறும் போது ஏற்படும் வலி அல்லது எரிச்சல் உணர்வு, சிறுநீர் நிறத்தில் மாற்றம், சிறுநீரின் அளவு குறைவது மற்றும் அடிவயிற்றில் வலி போன்ற பல்வேறு அறிகுறிகள் மூலமாக சிறுநீர் பாதை தொற்றைக் கண்டறிய முடியும். இந்த தொற்றை வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் சில வீட்டு வைத்திய முறைகள் இருப்பதாக மருத்துவர் நந்தினி தெரிவித்துள்ளார்.
முதலாவதாக, தினசரி இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். இதேபோல், வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, நெல்லிக்காய் மற்றும் கொத்தமல்லி இலைகள் ஆகிய இரண்டையும் சேர்த்து அரைத்து ஜூஸாக குடிக்கலாம். இதனை வாரத்திற்கு மூன்று நாட்கள் குடிக்கலாம் என்று மருத்துவர் நந்தினி அறிவுறுத்துகிறார்.
இது தவிர சிறுநீரை நீண்ட நேரத்திற்கு அடக்கி வைத்திருக்கக் கூடாது. சரியான இடைவெளியில் சிறுநீரை வெளியேற்றி விட வேண்டும். இது தொற்று உருவாகும் வாய்ப்பை குறைக்கும்.
நன்றி - Sarans NFC Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.