கிவி பழத்தை விட பெஸ்ட்; கொதிக்க வைத்தாலும் விட்டமின் சி-யை இழக்காத ஒரே காய் இது: மருத்துவர் சிவராமன்
நெல்லிக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் சிவராமன் பல்வேறு தகவல்களை விளக்கியுள்ளார். கிவி பழத்தை விட இதில் அதிக சத்துகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெல்லிக்காயை நம் தினசரி உணவில் எடுத்துக் கொண்டால், அதில் இருந்து பல்வேறு சத்துகள் நம் உடலுக்கு கிடைக்கும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். பல வெளிநாட்டு பழங்களையும் விட இதில் அதிகப்படியான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன.
Advertisment
இத்தகைய நெல்லிக்காயை நம் உணவில் எவ்வாறு சேர்த்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். உதாரணத்திற்கு, காலையில் எழுந்ததும் தேநீர் குடிக்கும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கும். ஆனால், தேயிலையில் அதிகப்படியாக பால் மற்றும் சர்க்கரை சேர்த்து குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது கிடையாது என்று அவர் குறிப்பிடுகிறார்.
அதன்படி, கொதிக்கும் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் தேயிலையை போட்டு, மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் மூடி வைத்து, அதன் பின்னர் வடிகட்டி குடிக்கலாம் என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். அதற்காக தினசரி தேயிலை தான் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அதற்கு பதிலாக நெல்லிக்காய் தேநீர் குடிக்கலாம். வெறும் நெல்லிக்காய் பொடியை கொதிக்கும் சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம். இவ்வாறு குடித்தால் ஆரோக்கியம் மேம்படும். உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க நெல்லிக்காய் உதவுகிறது. ஆனால், அதற்கு பதிலாக கிவி போன்ற பழங்களை நாம் பயன்படுத்துகிறோம்.
Advertisment
Advertisements
ஆனால், கிவி பழத்தை விட நெல்லிக்காயில் அதிகமான சத்துகள் இருக்கிறது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். குறிப்பாக, சில பொருட்களில் இருக்கும் வைட்டமின் சி, வெயில் பட்டாலே போய் விடும் தன்மை கொண்டது. ஆனால், நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி-யை கொதிக்க வைத்தாலும் அப்படியே இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய நன்மைகள் அளிக்கக் கூடிய நெல்லிக்காய்களை நாம் அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்தியுள்ளார்.
நன்றி - Healthy Tamilnadu Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.