நீரிழிவு நோய் பாதிப்பால் நீண்ட நாள்களாக சிரமப்படுகிறீர்களா, இந்த ஜூஸ் காலையில் குடித்தால் எளிதாக சுகர் பிரச்சினைக்கு விடிவு காலம் பிறக்கும். அத்துடன் பல நன்மைகளை இங்கே காணலாம்.
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்சுலின் சுரப்பு குறைவதால் ஏற்படும் இந்த வகை நோயால், இந்தியாவில் சுமார் 77 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது. பெரும்பாலானோருக்கு டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது. அதனை கட்டுப்படுத்த பல வழிகள் இருந்தாலும், காலையில் இந்த கிரீன் ஜூஸ் குடிப்பது நல்ல பலன் கிடைக்கக்கூடும்.
நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பவர்கள் சர்க்கரை கலந்த பானத்தை குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆனால், இந்த கிரீன் ஜூஸ், நீரிழிவு நோயை கட்டுப்டுத்துகிறது. சிறந்த பலனை பெற, காலையில் இதனை பருக வேண்டும்.
டைப் 1, டைப் 2, இரைப்பை குடல் நீரிழிவு உட்பட அனைத்து வகை நீரிழிவு நோய் பாதிப்புக்கும் உதவியாக இருக்கும். இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால், ஜூஸ் குடிப்பதன் மூலம் எனர்ஜி அளவும் அதிகரிக்கிறது. உங்கள் விருப்பப்படி 4 முதல் 6 வரையிலான பொருள்களை சேர்த்துக்கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்
- கிரீன் ஆப்பிள்
- வெள்ளரிக்காய்
- எலுமிச்சை
- கேல்
- பச்சை முட்டைக்கோஸ்
- செலரி
- கீரை
- பீட்ரூட்
- பூண்டு
- தக்காளி
- இஞ்சி
- பாகற்காய்.
தேவையான பொருள்களை மிக்ஸ் செய்து, தண்ணீர் ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.
கிரீன் ஜூஸ் சிறப்பு அம்சங்கள்
- உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் அனைத்து வகையான நீரிழிவு நோய் அபாயத்தையும் குறைக்கிறது.
- வைட்டமின் ஏ, சி, கே மற்றும் இரும்பு ஆற்றல் கிடைக்கின்றன
- நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி, ஆற்றல் அளவை அதிகரிக்கிறது
- உடலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகரிக்கும்.இது பல்வேறு நோய்களிலிருந்து உங்களைத் தடுத்திடும்
- உடலில் நச்சுத்தன்மையை வெளியேற்றி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
- எனர்ஜி லேவல் மற்றும் மெட்டோபாலிக் ரெட்டை அதிகரித்து
- அனைத்து உடல் உறுப்புகளின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil