கசப்புத் தன்மை கொண்ட குறிஞ்சாங்கீரை அதிகம் தற்போது பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் இதை சூப் வைத்து குடிப்பதால் நமக்கு கிடைக்கும் முக்கியமான சத்துக்களை பற்றி டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
குறிஞ்சாங்கீரை மிகவும் கசப்பு தன்மை கொண்டது. தற்போது இந்த கீரை பயன்பாட்டில் இல்லை. சர்க்கரை அளவுகளை குறைப்பதில் இந்த குறிஞ்சாக்கீரைக்கு உள்ள சக்தி வேறு எந்த கீரைக்கும் இல்லை என்று டாக்டர் கூறுகிறார்.
பாம்பு கடி, சர்க்கரை நோய், மலேரியா போன்ற நோய்களுக்கும் இந்த கீரை பயன்படுகிறது. இந்தக் கீரை கழுவி விட்டு சிறிது எடுத்து மென்று சாப்பிட்டால் இதற்குப் பிறகு எந்த இனிப்பு சாப்பிட்டாலும் சுவை தெரியாது அந்த அளவுக்கு இந்த கீரை கசப்பு தன்மை கொண்டதாகும்.
இந்த குறிஞ்சா இலைகளை இரவு ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடித்தால் சர்க்கரை கட்டுப்படும். சர்க்கரையால் வரக்கக்கூடிய புண்கள் போன்றவற்றையும் குணப்படுத்தும். சர்க்கரை இல்லாதவர்கள் கூட இதனை சூப் வைத்து குடிக்கலாம்.
Advertisment
Advertisements
இன்சுலின் சுரப்பை சமநிலைப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதையும் இந்த கீரையின் பயன் அதிகமாக உள்ளது. இந்த இலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து டீ மாதிரி கூட குடிக்கலாம்.
இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அதில் சூப் மாதிரி செய்து குடிக்கலாம். சூப் செய்த பின் மீதம் இருக்கும் கீரையை சட்னி மாதிரி செய்தும் சாப்பிடலாம்.
சூப் செய்ய தேவையான பொருட்கள்
கருப்பு மிளகு சீரகம் கொத்தமல்லி கடுகு விதைகள் தக்காளி பூண்டு கறிவேப்பிலை
செய்முறை
கீரையை சுத்தம் செய்து அதோடு மேற்குறிப்பிட்ட அனைத்தையும் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.