ஒரு கடலையில் இத்தனை சத்து... சட்னி செஞ்சு சாப்பிட்டால் அப்படியே கிடைக்கும்: டாக்டர் சிவராமன்
நிலக்கடலையை அரைத்து சட்னி செய்து சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு சத்துகள் கிடைக்கும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
நிலக்கடலையை அரைத்து சட்னி செய்து சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு சத்துகள் கிடைக்கும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலான உணவுகளை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் நிலக்கடலையில் இரும்புச் சத்து, துத்தநாகச் சத்து, புரதம், செலினியம் உள்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கின்றன. அதன்படி, நிலக்கடலை கொண்டு சுவையான சட்னி எப்படி தயாரிக்கலாம் என்று காணலாம்.
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கப் அளவிற்கு நிலக்கடலையை போட்டு 8 நிமிடங்களுக்கு நன்றாக வறுக்க வேண்டும். அதன் பின்னர், நிலக்கடலையின் தோலை நீக்கிக் கொள்ளலாம். இதையடுத்து அடுப்பில் இருக்கும் பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், பொடியாக நறுக்கிய வெங்காயம் 100 கிராம், 6 பல் பூண்டு மற்றும் மூன்று காய்ந்த மிளகாய்கள் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்க வேண்டும்.
பின்னர், இவை அனைத்தையும் வறுத்து வைத்திருந்த நிலக்கடலையுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். இதனை அரைக்கும் போது கூடுதலாக அரை கப் துருவிய தேங்காய், சிறிதளவு புளி, ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் அரை கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
இதையடுத்து, அரைத்து வைத்திருக்கும் சட்னியின் மீது கறிவேப்பிலை மற்றும் கடுகு ஆகியவற்றை தளித்து ஊற்ற வேண்டும். இப்படி செய்தால் நிலக்கடலை சட்னி தயாராகி விடும்.