இரவில் ஊறவைத்த பாதாம் பிசின் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுதல் மற்றும் குழந்தையின்மையை போக்கி கருத்தரிக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்திடும் என்று டாக்டர் கௌதமன் ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
பாதாம் பிசின் உடலில் ஏற்படும் அதீத சூட்டை தனித்து அசிடிட்டி பிரச்சனைகளை குணப்படுத்தி, தசைகளின் உறுதியையும், ஆண்மை,விறைப்புத்தன்மையையும் அதிகரித்திடும். எலும்புகளை பலப்படுத்தி ஞாபக சக்தியை அதிகரிக்க செய்து தன்னம்பிக்கையை உருவாக்கிடும் என்றும் கூறுகிறார்.
பாதாம் பிசின் பெண்களுக்கான மிகச் சிறந்த அறுமருந்து என டாக்டர் கௌதமன் கூறுகிறார். பெண் குழந்தைகளுக்கு இது மிகவும் ஆரோக்கியம் தரக் கூடியது. இரவில் 1 தேக்கரண்டி பாதாம் பிசினை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலை எழுந்த உடன் அதை மென்று சாப்பிட வேண்டும்.
வெறும் வயிற்றில் சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் மாற்றம் தெரியும். முகப் பொழிவு பெரும். தலைமுடி உதிர்தல் குறையும். தலைமுடி கருமையாக வளரும். உடல் சூடினால் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க முடியும். குழந்தைகள் ஆரோக்கியம் இருப்பர். பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் சீராக வருவதற்கு இந்த பாதாம் பிசின் உதவும் என்றார்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.