வெண்சோளம் என்கிற சிறு சோளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறுசோளம் ஒரு புரதம் நிறைந்த உணவாகும். குழந்தைகளுக்கு சிறு வயதில் அதிகமாக சளி பிடித்தல், இருமல், தும்மல், ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளுக்கு சிறு சோளம் ஒரு நல்ல தீர்வை கொடுக்கும்.
இது மாதிரியான பிரச்சினைகள் எல்லாம் புரதச்சத்து மற்றும் நோயாற்றல் குறைபாடுனாலேயே இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனால் புரத சத்த அதிகப்படியாக உள்ள உணவை குழந்தைகளுக்கு கொடுத்தோம் என்றால் சளி பிடித்தல், இருமல், தும்மல், ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும். சில தானியங்களில் மட்டுமே புரதச்சத்து முழுமையாக கிடைக்கும்.
அதே போல இந்த சிறு சோளத்திலும் புரதச்சத்து முழுமையாக கிடைக்கும். இந்த சோளத்தை நேரடியாக சாப்பிடாமல் உணவு வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். சோள மாவு சேர்த்து தோசை சாப்பிடுவதால் எண்ணெய் சேர்க்காமல் தோசை மொறு மொறு என்று வரும் என்பதாலும் குழந்தைகளுக்கு அதிகம் பிடிக்கும்.
எனவே எப்பொழுதும் அரிசி மாவில் தோசை சுடாமல் அவ்வப்போது அதாவது வாரத்தில் இருமுறையோ அல்லது மூன்று முறையோ, சோள மாவு கலந்து குழந்தைகளுக்கு தோசை சுட்டுக் கொடுத்தால் புரதச்சத்து உடலில் அதிகமாகும். அதைப்போல சோள் மாவு அரிசி கலந்து சோள பணியாரமும் செய்து கொடுக்கலாம் மிகவும் சத்தாக இருக்கும்.
குழந்தைகள் நன்றாக சாப்பிடுவதற்கு சத்துமாவு பவுடர், சத்துமாவு கஞ்சி செய்து கொடுக்கலாம். சத்துமாவு செய்யும் அனைத்து பொருட்களுடனும் இந்த சிறு சோளத்தையும் சேர்த்து சாப்பிடலாம். இது மாதிரியான உணவுகள் சுவையாகவும் சத்தாகவும் இருக்கும்.
மக்காச்சோளத்திலும் இந்த சத்துக்கள் அனைத்தும் கிடைக்கிறது பிறகு ஏன் சிறுசோளம் என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். மக்காச்சோளம் வெளிநாடுகளில் இருந்து வருவதால் மரபணு மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் மக்காச்சோளத்தை விட சிறு சோளம் மிகவும் சத்தானது.
சில குழந்தைகளுக்கு உடலில் கரப்பான், அலர்ஜி போன்ற எக்ஸிமா பிரச்சனைகள் இருக்கும். அரிப்பு, தோல் சம்பந்தமாக பிரச்சனை உள்ள குழந்தைகள் சோளத்தை அதிக எடுத்துக்கொள்ளக் கூடாது. மற்றபடி தினசரி சாப்பாட்டில் குழந்தைகள் நன்றாக இதனை எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் சிறுசோளத்தை சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“