கீரை சாப்பிடுவது நன்மைதான் ஆனால் இன்றைய சூழலில் நிறைய பேர் கீரை என்ற ஒன்றையே மறந்து விட்டனர் அப்படி நாம் மறந்து போன கீரைகளில் ஒன்றான மூக்கிரட்டை கீரையின் நன்மைகள் பற்றி டாக்டர் மைதிலி தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
மூக்கிரட்டை சிறுநீரகக் கல், பித்தப்பை கல் பிரச்னைக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. உடலில் ஏற்படும் வாதம் சம்பந்தமான நோய்களை நீக்க உதவுகிறது. அதுதவிர புற்றுநோய் செல்களை தடுக்கும்.இரத்தசோகை குணமாகும்.
ஆன்டி ஆக்ஸிடன்டுகள் இக்கீரையில் நிறைந்து உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்ட உதவும். ரத்த சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த மூக்கிரட்டை உதவுகிறது. மூளைக்கு ஆற்றலை அழித்து சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் நீர் தேங்கி அதை சரிசெய்யவும் உதவுகிறது. மூட்டு வலி மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் குறையும்.
செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் பிரச்னையை குறைக்க உதவும். சரும நோய்களை குணப்படுத்தி முகப்பொலிவினை மேம்படுத்த உதவும்.
Advertisment
Advertisements
கீரைகள் இயல்பாகவே அதிக சத்துக்களைக் கொண்டுள்ளதால் ரத்தசோகை பிரச்சனையை முழுவதும் குறைக்கக் கூடும். சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை அகற்றி சிறப்புடன் செயல்பட உதவும்.
உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை அகற்றியும், கெட்ட கொழுப்புகளை நீக்கியும் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவும். இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது.
ரத்த சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த மூக்கிரட்டை உதவுகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளைக் கொண்ட இக்கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வர யூரியா, கிரியாட்டினின் அளவு சீராக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.