scorecardresearch

காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய்… இவ்ளோ விட்டமின் இருக்கு!

காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டு வர பல நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய்… இவ்ளோ விட்டமின் இருக்கு!

பொதுவாக உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் தங்களது உணவில் நெய், வெண்ணெய் போன்றவற்றை தவிர்த்துக் கொள்வர். சிலருக்கு பால் பொருட்கள் நெய், வெண்ணெய், தயிர் பிடிக்காது. ஆனால் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டு வர பல நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆயுர்வேத மருத்துவத்தில் கூறியுள்ளதுபடி, காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் எடுத்துக்கொள்வது, சிறுகுடலுக்கு நன்மை அளிக்கிறது. செரிமான அமைப்பைச் சுத்தப்படுத்தி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. இரைப்பையின் அமில தன்மையை குறைப்பது, மன அழுத்தம், தூக்கமின்மை, நுண்ணுயிர் எதிர்பாற்றல், குடல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு உதவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒமேகா 3 வகை கொழுப்பு அமிலங்களின் ஆதாரமான நெய், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. உடல் எடையை குறைக்கவும் முறையாக நெய் பயன்படுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்ஸா பவ்சர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காலையில் பசு நெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவரித்துள்ளார்.

பசுவின் நெய் உடலில் நல்ல கொழுப்பை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான கொழுப்பை பராமரிக்க உதவுகிறது. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் இ மற்றும் வைட்டமின் கே போன்றவை இருப்பதால் அவை உடலில் எளிதில் உறிஞ்சுக் கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.

வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

  1. செரிமான அமைப்பை சுத்தப்படுத்துகிறது. நெய் வயிற்றில் அமில சுரப்புக்கு வழிவகுக்கிறது, இது உணவை விரைவாக ஜீரணிக்க உதவுகிறது.
  2. பளபளப்பான சருமம்: தோல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால், நெய் சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
  3. நெய்யில் உள்ள வளவளப்பு தன்மை குடல் பாதையில் உணவை தேங்கவிடாமல் செய்து, சீரான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.
  4. நெய் சேர்த்து சமைக்கப்படும் உணவுகள் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே வயிறு நிறைந்தது போல் உணர்ந்திருப்பீர்கள். அதாவது நெய் சாப்பிடுவது பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.
  5. ஒரு ஸ்பூன் நெய்யில் 112 கலோரிகள் இருக்கிறது. 0.04 கிராம் புரதம், வைட்டமின்கள் , ஏ, டி, கே உள்ளது, 45 மில்லி கிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், 2.7 மில்லி கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலம் ஆகியவை உடல் ஊட்டச்சத்துக்கு உதவுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Health benefits of taking ghee early in morning