scorecardresearch

சுவையான ‘முருங்கைக்காய் கிரேவி’ இப்படி செய்யுங்க.. 10 நிமிடத்தில் வேலைய முடிங்க!

முருங்கையில் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். முருங்கைக்காயில் சாம்பார், குழப்பு என பல ரெசிபிகள் செய்யலாம். அந்தவகையில் சுவையான முருங்கைக்காய் கிரேவி செய்வது குறித்து இங்கு பார்க்கலாம்.

சுவையான ‘முருங்கைக்காய் கிரேவி’ இப்படி செய்யுங்க.. 10 நிமிடத்தில் வேலைய முடிங்க!

முருங்கை மரத்தில் உள்ள அத்தனை பாகங்களும் உணவாக சமைத்து சாப்பிடப்படுகிறது.
முருங்கை காய், முருங்கை பூ, முருங்கை தண்டு, முருங்கை கீரை என அனைத்தும் உணவாக சமைத்து சாப்பிடப்படுகிறது. முருங்கை மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் தொடர்பான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. முருங்கை உணவு வகைகளை சாப்பிட்டு வர சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உடலில் உள்ள ரத்தம் சுத்தமடையும் எனக் கூறுகின்றனர். அந்தவகையில், முருங்கைக்காய் கிரேவி செய்வது குறித்து இங்கு பார்க்கலாம். 10 நிமிடத்தில் சுலபமாக செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 ஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன்

வெந்தயம் – அரை ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

கருவேப்பிலை – சிறிது

வெங்காயம் – 4

10 முருங்கைக்காய்கள்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மல்லித்தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

தேவையான அளவு தண்ணீர்

உப்பு -தேவையான அளவு

கடலை மாவு – ஒரு சிறு கப்

தேங்காய் பால் 200 மி.லி

கொத்தமல்லி இலைகள்

செய்முறை

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம், உளுந்து, சீரகம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். இப்போது, முருங்கைக்காய், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும். முருங்கைக்காய் நன்கு வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.

இறுதியாக கடலை மாவு, தேங்காய் பால் கலவையை கடாயில் கொட்டி கலக்க வேண்டும். கிரேவி கெட்டியாகும் வரை சமைத்து, கொத்தமல்லி இலையால் அலங்கரித்து பரிமாறவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Healthy and yummy drumstick gravy recipe