டேஸ்டியான இந்த 3 ட்ரிங்ஸ்… காலையில் குடிச்சா இவ்ளோ நன்மை இருக்கு!
Here are easy and quick drinks which you can add to your morning routine for better health and weight loss Tamil News: எடை இழப்புக்கு ஒரே நேரத்தில் உதவும் பல்வேறு பானங்கள் உள்ளன. காலையில் இந்த பானங்களை குடிப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் பல வழிகளில் மேம்படுத்ததலாம்.
Healthy Morning drinks in tamil: உங்கள் நாளை சத்தான மற்றும் சில ஆரோக்கியமான காலை பானங்களுடன் தொடங்குவது மிகவும் நன்மை பயக்கும். அவ்வகையில், சரியான காலை பானத்தை குடிப்பது உங்கள் பசியின்மை மற்றும் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. அப்படி உங்கள் காலையை தொடங்குவதற்கு, நீங்கள் சில எளிய பானங்களை தயார் செய்யலாம்.
Advertisment
எடை இழப்புக்கு ஒரே நேரத்தில் உதவும் பல்வேறு பானங்கள் உள்ளன. காலையில் இந்த பானங்களை குடிப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் பல வழிகளில் மேம்படுத்ததலாம். மேலும் இந்த மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் சேர்க்கப்பட்ட பானங்கள் உங்கள் உடல் எடையை விரைவாக குறைக்கவும், உங்கள் உடலை நச்சுத்தன்மையில் இருந்து போக்கவும் உதவுகிறது.
அந்த வகையில் எடை இழப்புக்கு உதவும் சில சிறந்த காலை பானங்களை இங்கே பார்க்கலாம்.
எலுமிச்சை - தேன் கலந்த தேநீர்
எலுமிச்சை மற்றும் தேன் கலந்த தேநீர் உடல் எடையை குறைக்க உதவும் ஒரு சிறந்த காலை பானமாகும். ஒரு சூடான கப் எலுமிச்சை மற்றும் தேன் கலந்த தேநீர் உங்களை உற்சாகப்படுத்தும் மற்றும் உங்கள் காலையை ஒரு நல்ல தொடக்கத்திற்கு கொண்டு செல்லும். அவை எடை மேலாண்மை மற்றும் வளர்சிதை மாற்ற தூண்டுதலுக்கும் உதவுகின்றன. உங்கள் எலுமிச்சை கலந்த தேநீரில் இரண்டு தேக்கரண்டி தேன் மட்டும் சேர்த்தால் போதும்.
ஆம்லா அல்லது நெல்லி ஜூஸ்
எடை இழப்புக்கான சிறந்த காலை சாறுகளில் ஒன்று நெல்லிக்காய் ஜூஸ். உங்கள் செரிமான அமைப்பு மேம்படுத்தப்பட்டு, தண்ணீரில் செறிவூட்டப்பட்ட நெல்லிக்காய் சாற்றின் உதவியுடன் முழுமையாக செயல்பட வாய்ப்பு வழங்கப்படும். கூடுதலாக, இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை சாதகமாக துரிதப்படுத்தும்.
எடை இழப்புக்கான சிறந்த காலை பானத்தைத் தயாரிக்க, இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் சாற்றை ஒரு கிளாஸ் தண்ணீருடன் சேர்க்கவும். காலையில் எதையும் சாப்பிடாமல் இந்த பானத்தை முதலில் உட்கொள்ளுங்கள்.
3. இஞ்சி டீ
ஆரோக்கிய நன்மைகள் என்று வரும்போது இஞ்சி டீ தான் ராஜா. வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணத்திற்கு சிறந்த இஞ்சி டீ, ஒரு துளி தேனுடன் சூடாக பரிமாறலாம். இந்த பானம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை இழப்புக்கான நன்கு அறியப்பட்ட காலை பானமாகும். தினமும் காலையில் ஒரு கப் இஞ்சி டீ குடிக்கத் தொடங்கினால், அதன் நன்மைகளை நீங்கள் கவனிப்பீர்கள்.