ரொம்ப டேஸ்டான ஹெல்தியான உடல் எடை குறைக்க உதவும் தோசை எப்படி செய்வது என்று பார்போம். இந்த தோசையை உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் தினசரி காலை இரவு இருவேளைகளிலும் சாப்பிடலாம்.
மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் ஒரு வேளை அல்லது வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாவது சாப்பிடலாம். உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவும்.
இந்த மாதிரி செஞ்சு கொடுத்தீங்கன்னா சின்ன பிள்ளைகளும் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க வாங்க எப்படி செய்யலாம்னு பாப்போம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பயிறு
உப்பு
பச்சரிசி
குடை மிளகாய்
இஞ்சி
பச்சை மிளகாய்
சீரகம்
கருவேப்பிலை, கொத்தமல்லி தழை
செய்முறை
ஒரு கப்பில் தேவையான அளவு பாசிப்பருப்பு எடுத்து ஐந்து மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மூன்று ஸ்பூன் பச்சரிசி எடுத்து அதையும் கழுவி ஊற வைக்க வேண்டும்.
இரண்டும் நன்கு உரியதும் பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்து குடை மிளகாய், இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, சீரகம் தண்ணீர் ஊற்றி நன்கு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் WeightLoss Dosai/Pachai Payaru Dosai/Pesarattu/பச்சைபயறு தோசை
இதில் தேவையான அளவு உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து தோசை பதத்திற்கு மாவு கரைத்து ஒரு பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
எப்போதும் போல தோசை ஊற்றினால் உடல் எடை குறையும் தோசை ரெடியாகி விடும். இதை எல்லா வகையான சட்னியுடனும் சேர்த்து சாப்பிடலாம். இந்த தோசையை காலை மற்றும் இரவு சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“