ரத்தக் கொழுப்பை போக்கும் பலாப் பழம்... ஆதாரங்களுடன் அடுக்கும் டாக்டர் ஆஷா லெனின்
பலாப்பழம் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு குறைந்து, மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படாது; வைட்டமின் சி,ஏ நோய் எதிர்ப்பு சக்தி, கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது - மருத்துவர் ஆஷா
கோடை காலங்களில் இளநீர், நுங்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது பலாப்பழம் சாப்பிடுவது. குயின் ஆஃப் ஃப்ரூட்ஸ் என்று சொல்லப்படக்கூடிய பலாப்பழத்தில் விட்டமின் சி அதிகளவில் உள்ளது. இதனை சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள ஹோமோ சிஸ்டைன் குறைந்து ரத்த அழுத்தம் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் ஆஷா லெனின் கூறுகிறார்.
Advertisment
இதுதொடர்பாக டாக்டர் ஆஷா லெனின் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், பலாப்பழத்தில் புரதச்சத்து, மாவுச்சத்து, ஏ,பி,சி வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளதால், குடல்களில் ஏற்படும் நோய்களைக் போக்கி, குடல்களின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
ரத்தக் குழாய்கள் இருக்கும் படிந்து அடைப்பை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்புகளை சுத்திகரிக்கும். பலாப்பழம் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு குறைந்து, மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படாது என்றும் வைட்டமின் சி,ஏ நோய் எதிர்ப்பு சக்தி, கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று கூறுகிறார் மருத்துவர் ஆஷா.
அண்மையில் அமெரிக்கன் ஹார்ட் பவுண்டேஷனில் நடத்தப்பட்ட ஆய்வில், பலாப்பழம் சாப்பிட்டால், ரத்த அழுத்தம் குறைந்து, கொழுப்பு இல்லாமல் இருப்பதும், சர்க்கரை அளவு சம அளவிலேயே இருப்பதும் தெரியவந்தது. பொட்டாட்சியம் அதிகளவில் இருப்பதால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மற்றும் கிட்னி நோயாளிகள் பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என்றும் சொல்கிறார் மருத்துவர் ஆஷா.
Advertisment
Advertisements
மேலும், பலா இலையை சுடுதண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிப்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் என்று 2013-ல் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக மருத்துவர் சுட்டிக் காட்டினார். கொய்யா இலையை விட ஆயிரம் மடங்கு நன்மை தரக்கூடியது பலா இலை. கணையத்தில் இருக்க்கூடிய செல்களை அழியாமல் தடுத்து இன்சுலின் அளவை கூட்டுகிறது என்றும் பலாக் கொட்டையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் நம் உடல் செல்களில் உள்ள கழிவுகளை நீக்கி, புற்றுநோய் வராமல் காக்கும் என்றும் மருத்துவர் ஆஷா கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.