கேன்சர் செல்கள் வளர்ச்சியை தடுக்கும் சொடக்கு தக்காளி; முழு நன்மைகளை விளக்கும் டாக்டர் மைதிலி
கேன்சர் செல்கள் ஓரிடத்திலிருந்து பிற இடங்களுக்கு பரவுவதை தடுக்கும். மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தூண்டும் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும்; சொடக்கு தக்காளியின் நன்மைகள் இங்கே
சாதாரண தக்காளியை நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். இந்த தக்காளி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. அதேநேரம் நாம் பெரிதும் கேள்விப்படாத சொடக்கு தக்காளியும், இதை விட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
Advertisment
இந்த சொடக்கு தக்காளி என்பது என்ன? என்ன ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது? உள்ளிட்ட விபரங்களை டாக்டர் மைதிலி தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, சொடக்கு தக்காளியை நாம் அன்றாடம் பயன்படுத்தும் தக்காளிக்கு மாற்றாக பயன்படுத்தலாம். இந்த சொடக்கு தக்காளியில் உள்ள வித்னோளைடு என்ற வேதிப்பொருள் அனைத்து வகையான புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். புற்றுநோய்க்காக கீமோதெரபி சிகிச்சை எடுத்து வருபவர்கள் இதை சாப்பிடலாம். இது கேன்சர் செல்கள் ஓரிடத்திலிருந்து பிற இடங்களுக்கு பரவுவதை தடுக்கும். மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தூண்டும் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும்.
இதில் உள்ள விட்டமின் ஏ சத்து கண்புரை நோய், மாலைக்கண் நோய் வரும் வாய்ப்பை குறைக்கும். மேலும் பார்வை திறனை மேம்படுத்தி, கண் பார்வையை கூர்மையாக்கும்.
Advertisment
Advertisements
விட்டமின் பி3 மற்றும் கால்சியம் ஊட்டச்சத்துக்கள் எலும்புகளை வலுவடையச் செய்து, எலும்பு தொடர்பான நோய்கள் வருவதை தடுக்கும். மேலும் மூட்டு வலி இருப்பவர்கள் சொடக்கு தக்காளி சாப்பிட்டால் வலி குறையும். சொடக்கு தக்காளி இலையை கொதிக்க வைத்து குடிப்பதும் மூட்டு வலி குறைய உதவும்.
அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் சொடக்கு தக்காளியை சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல், ஏப்பம் உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்யும். வயிற்று புண்ணை ஆற்றும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விட்டமின் சி ஊட்டச்சத்தும் சொடக்கு தக்காளியில் அதிகமாக உள்ளது. இரும்புசத்தும் அதிகமாக உள்ளது. இரத்தசோகை ஏற்படக்கூடிய வாய்ப்பை குறைக்கும்.