யூரிக் அமில பிரச்னை? மஞ்சள் உடன் இந்த 2 பொருள் சேர்த்தாப் போதும்: டாக்டர் நித்யா
மஞ்சளுடன் இந்த பொருட்களை சேர்த்து 10 நாட்கள் குடித்தால், யூரிக் அமிலம் நன்றாக குறையும். இரத்த அழுத்தம் இயல்பாகும், சர்க்கரை குறையும், கொழுப்பு கரையும் – டாக்டர் நித்யா விளக்கம்
நம் உடலில் உள்ள கழிவுகள் அவ்வப்போது வெளியேற வேண்டும். அப்படி சரியாக வெளியேறவில்லை என்றால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக யூரிக் அமிலம் அதிகமானால் கால் வலி, வீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Advertisment
இந்தநிலையில், யூரிக் அமிலம் அதிகமாவதால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் உணவின் மூலம் சரி செய்வது எப்படி என்பதை மிஸ்டர் லேடீஸ் என்ற யூடியூப் சேனலில் டாக்டர் நித்யா விளக்கியுள்ளார்.
வீடியோவின் படி, நம் உடலில் வளர்சிதை மாற்றத்தின் முடிவில் வெளிப்படும் கழிவுகள் அவ்வப்போது வெளியேற்றபடும். ஆனால் கழிவுகள் வெளியேறவில்லை என்றால், உடல் பிரச்சனைகள் ஏற்படும். இப்படியான கழிவுகளில் ஒன்று யூரிக் அமிலம். யூரியா, கிரியாட்டினின் சரியாக இருந்தாலும், சில நேரம் யூரிக் அமிலம் ரத்தத்தில் அதிகமாக இருக்கும்.
சிறுநீரக பாதிப்பு காரணமாகவே யூரிக் அமிலம் அதிகமாகிறது. இந்த யூரிக் அமிலம் படிகங்களாக உடலில் தங்க ஆரம்பிக்கும். யூரிக் அமிலம் அதிகமானால் கால்களில் அதிகமாக வலி இருக்கும். குறிப்பாக கால் பெருவிரலில் அதிக வலி மற்றும் வீக்கம் ஏற்படும். இதனை கவனிக்காமல் விட்டால், பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அடுத்ததாக மூட்டுகளில் அதிக வலி ஏற்படும். காலையில் எழுந்தவுடன் கடுமையான வலி இருக்கும்.
Advertisment
Advertisements
அதிக புளிப்பு சார்ந்த உணவுகள் காரணமாக யூரிக் அமிலம் அதிகமாகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடும்போதும், ஆல்கஹால் மற்றும் புகைப்பழக்கம் இருந்தாலும் யூரிக் அமிலம் அதிகரிக்கும். அடுத்து எண்ணெய்யில் பொரித்த அசைவ உணவுகள் காரணமாகவும், இரவு தாமதமாக உணவு எடுத்துக் கொள்வதன் காரணமாகவும் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும்.
யூரிக் அமிலம் மட்டும் அதிகமாக இருந்தால், எளிதாக குணப்படுத்தலாம். உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் முக்கிய உணவுகளில் மஞ்சள் முக்கிய பங்காற்றுகிறது. மஞ்சள் தூள் 100 கிராம், மிளகு மற்றும் ஓமம் தூள் தலா 10 கிராம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துக் கொள்ள வேண்டும். இதில் இருந்து அரை ஸ்பூன் பொடியை 2 கிளாஸ் தண்ணீரில் சேர்த்து, இதனுடன் ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வடிகட்டி 10 நாட்கள் தொடர்ந்து குடிக்க வேண்டும். இப்படி செய்யும்போது யூரிக் அமிலம் நன்றாக குறையும். மேலும், இரத்த அழுத்தம் இயல்பாகும், சர்க்கரை குறையும், கொழுப்பு கரையும்.