இந்த விதையை நெய்யில் வறுத்து பொடியாக்கி தினமும் அரை ஸ்பூன்... 40 வயதை கடந்த பெண்கள் நோட் பண்ணுங்க!
எலும்புகள் சார்ந்த வலி எதுவாக இருந்தாலும் சரி, வாதம் சார்ந்த நோய்களாக இருந்தாலும் சரி அல்லது இரும்புச் சத்துக் குறைபாடு இருந்தாலும் சரி; இந்த விதையை பொடி செய்து சாப்பிடுங்க – டாக்டர் நித்யா
முருங்கை கீரை, முருங்கை காய் நாம் அடிக்கடி பயன்படுத்தி வரும் உணவுகள் தான். முருங்கையில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக மருத்துவர்களும் கூறி வருகின்றனர். இதனால் மக்கள் தங்கள் உணவுகளில் அடிக்கடி முருங்கை சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர்.
Advertisment
இந்தநிலையில், 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கால்சியம் சத்து சற்று அதிகமாக தேவைப்படுவதாக மருத்துவர் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த கால்சியம் சத்து கிடைக்க முருங்கை சார்ந்த பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
இந்தநிலையில் முருங்கையை எப்படி சாப்பிட்டால் பெண்களுக்கான கால்சியம் சத்து அதிகமாக கிடைக்கும் என்பதை டாக்டர் நித்யா தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, எலும்புகள் சார்ந்த வலி எதுவாக இருந்தாலும் சரி, வாதம் சார்ந்த நோய்களாக இருந்தாலும் சரி அல்லது இரும்புச் சத்துக் குறைபாடு இருந்தாலும் சரி, இவற்றை சரி செய்வதற்கு முருங்கை நமக்கு பயன்படுகிறது.
Advertisment
Advertisements
முருங்கையை நாம் தினமும் சாப்பிடலாம். முருங்கை இலைகளை கீரைகளாக சமைத்து சாப்பிடலாம். முருங்கை விதைகளை பொடியாக்கி சாப்பிடலாம். முருங்கை விதைகளை பொடியாக்கி சாப்பிடும்போது அவ்வளவு சத்துக்கள் கிடைக்கிறது.
முருங்கை விதையை எப்படி பயன்படுத்தலாம் என்றால், முருங்கை விதையை லேசாக நெய்யில் வறுக்கும்போது, அதன் மேல் இருக்கும் தோல் உரிந்து வந்துவிடும். பின்னர் தோலை உரித்து விட்டு விதைகளை மட்டும் நாம் பயன்படுத்தலாம்.
முருங்கை விதையை லேசாக வறுத்து, பொடி செய்து வைத்துக் கொண்டு நாம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது இருந்த முருங்கை பொடியை தினமும் அரை ஸ்பூன் அளவிற்கு பாலில் சேர்த்து குடிக்கலாம். இப்படி பாலில் கலந்து குடிக்கும்போது நமது உடல் நல்ல ஒரு ஆரோக்கியமான நிலையில், எலும்புகள் வலுவடைந்து இருக்கும்.
40 வயதை கடந்த பெண்களுக்கு கால்சியம் சத்து கிடைக்க முருங்கை கீரை அல்லது பொடியை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.