உடல் சூடு; சிறுநீர் எரிச்சல்? அரைக் கீரையை இப்படி சாப்பிட்டா பயன் இருக்கு: மருத்துவர் சிவராமன்
எளிதில் ஜீரணம் ஆகும் என்பதால் அரைக்கீரையை குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம்; உடல் சூட்டை தணிக்க இப்படி சாப்பிடுவது சிறந்தது; மருத்துவர் சிவராமன் பகிரும் ஆரோக்கிய நன்மைகள் இங்கே
கோடைகாலங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்போது, பலருக்கு உடல் உஷ்ணம் அதிகரித்து அசௌகர்யம் மற்றும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உடல் சூடு அதிகரிப்புக்கு பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்வதால், அதற்கான சரியான தீர்வுகளைக் கண்டறிந்து கோடைகாலத்தில் உங்களை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும். கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தங்களை எவ்வாறு காத்து கொள்ள வேண்டும் என மருத்துவர் சிவராமன் கூறும் தகவல்களைப் பார்ப்போம்.
Advertisment
கோடை காலங்களில் உணவில் நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் எடுத்துக் கொண்டால் உடலில் ஏற்படும் சூட்டை குறைக்கலாம். அரைக் கீரை மசியல் (Keerai Masiyal) உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. உடல்சூடு, சிறுநீர் எரிச்சல் இருப்பவர்கள் அரைக்கீரையை குலைவாக கடைந்து உணவுடன் சேர்த்து, கீரை சாதமாக சாப்பிட்டால் உடல் சூட்டை குறைக்கலாம் என்கிறார் மருத்துவர் சிவராமன். எளிதில் ஜீரணம் ஆகும் என்பதால் குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம் என்கிறார். அதன் நடு தண்டுகளை விட்டு, மீதமுள்ள கீரைகளை நன்றாக பிடுங்கி வேக வைத்து அதனை மசியலாக செய்து சாப்பிடலாம்.
இதில் இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்கள் நிறைந்தது, மேலும் கண் பார்வையை மேம்படுத்துகிறது, கண் கோளாறுகளை சரிசெய்யவும் உதவுகிறது. சளி மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிக்கிறது. அரைக் கீரை மசியல் சமைக்க எளிதானது, மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அரைக்கீரை மசியல் சுத்தமான முறையில் செய்யப்படுகிறது, இது உடலுக்கு ஆரோக்கியமானது. உணவுச் செரிமானத்துக்கும் நல்லது. ரத்தசோகை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் ஏற்ற உணவுதான் இந்த அரைக்கீரை.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.