கால் வீக்கம்? உஷார்... இந்த அறிகுறி; பார்லி, சுரைக்காய் இப்படி சாப்பிடுங்க: டாக்டர் ஆஷா லெனின்
நீண்ட நேரம் நிற்பதால் கால்களில் வீக்கம் வருகிறதா? இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்; வீக்கம் வந்தால் என்ன சாப்பிட வேண்டும்? டாக்டர் ஆஷா லெனின் விளக்கம்
நம்மில் சிலருக்கு நீண்ட நேரம் நிற்கும்போதோ, பேருந்து அல்லது கார்களில் நீண்ட தூரம் பயணிக்கும்போதோ கால்களில் வீக்கம் வரலாம். 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பிரச்சனைகள் வருவதாக கூறப்படுகிறது. அப்படி கால்களில் வீக்கம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
கால்களில் வீக்கம் ஏற்படும் பிரச்சனைக்கு டாக்டர் ஆஷா லெனின் யூடியூப் வீடியோவில் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கியுள்ளார்.
அதன்படி, கால் வீக்கம் பெரிதாக பலூன் போன்று இருக்க வேண்டிய அவசியமில்லை. நீண்ட நேரம் நிற்கும்போது, நடக்கும்போது அல்லது வேலை பார்க்கும்போது, ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் கால்களில் வீக்கம் ஏற்பட்டால் அதற்கு கவனம் கொடுக்க வேண்டும். கால்களில் சதைப்பகுதியை கைவிரல்களால் குத்தும்போது குழி விழுந்தால் அலட்சியமாக இருக்காமல், உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதேநேரம் வீட்டில் உணவுகளில் சிலவற்றை மருந்துகளோடு சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். பார்லி கஞ்சி, வெண்பூசணி ஜூஸ், சுரைக்காய் ஜூஸ் போன்றவற்றை சாப்பிடலாம். கூடுதலாக சாப்பாட்டில் உப்பு குறைத்துக் கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
கிட்னி, இருதய பிரச்சனைகள், ஹீமோகுளோபின் குறைபாடு, தைராய்டு நோய்கள், வெரிக்கோஸ் வெயின் போன்ற பல காரணங்களால் கால்களில் வீக்கம் வரலாம். எனவே இதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், சிறிய வீக்கமாக இருக்கும்போதே அருகில் உள்ள மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வது சிறந்தது. 90% குடும்ப பெண்கள் இதனை அலட்சியமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அப்படி இருக்காமல் சிகிச்சை பெறுவது அவசியம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.